பெண் குழந்தைக்கு அப்பாவான ஷாஹீர் ஷேக்.. மகாபாரத இதிகாச தொடரில் அர்ஜுனராக கலக்கியவர்!
மும்பை: விஜய் டிவியில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான மகாபாரத தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலம் அடைந்தது.
அந்த இதிகாச தொடரில் அர்ஜுனராக நடித்த நடிகர் ஷாஹீர் ஷேக்கிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஏகப்பட்ட இந்தி தொடர்களில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷாஹீர் ஷேக் கடந்த ஆண்டு தான் ருச்சிகா கபூரை திருமணம் செய்து கொண்டார்.

பெண் குழந்தை
பிரபல இந்தி டிவி நடிகர் ஷாஹீர் ஷேக்கிற்கு அழகான பெண் குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிறந்துள்ளது. பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருக்கும் ருச்சிகா கபூர் மற்றும் நடிகர் ஷாஹீர் ஷேக்கிற்கு பெண் குழந்தை பிறந்ததை அறிந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மகாபாரதத்தில் அர்ஜுனர்
2009ம் ஆண்டு வெளியான கியா மஸ்த் ஹை எனும் இந்தி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் ஷாஹீர் ஷேக் ஸ்டார் பிளஸ்சில் இந்தியில் வெளியான மகாபாரத் எனும் இதிகாச தொடரில் அர்ஜுனராக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களின் மனங்களை பிடித்திருந்தார்.

விஜய் டிவியில்
2013ல் தொடங்கி 2015ல் ஒளிபரப்பான அந்த இந்தி மகாபாரத சீரியலை தமிழில் விஜய் டிவி மொழி பெயர்த்து வெளியிட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டது. அர்ஜுனராக நடிகர் ஷாஹீர் ஷேக்கிற்கு இங்கேயும் ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகைகள் உள்ளனர்.

காதல் திருமணம்
இந்திய டிவி தொடர்கள், இந்தோனேஷிய டிவி தொடர்கள், ஆல்பம் வீடியோக்கள் மற்றும் வெப்சீரிஸ் என கலக்கி வரும் நடிகர் ஷாஹீர் ஷேக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் காதலியான ருச்சிகா கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு துவக்கத்திலேயே லூசான உடைகளை அணிந்து ருச்சிகா கபூர் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையிலேயே கர்ப்பமாக இருக்கிறீங்களா என ரசிகர்கள் கெஸ் பண்ண ஆரம்பித்தனர். பின்னரு நட்சத்திர தம்பதிகள் இருவரும் இணைந்தே அதிகாரப்பூர்வமாக அந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

வளைகாப்பு வீடியோ
கடந்த மாதம் தனது மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பை நடத்தி முடித்தார் நடிகர் ஷாஹீர் ஷேக். பேபி ஷேக் வரப் போகிறார் என்கிற அட்டகாசமான அறிவிப்புடன் நடந்த அந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் டிவி பிரபலங்கள் சிலர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

சுஷாந்த் சிங் காதலியுடன்
மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான நடிகை அன்கிதா லோகாண்டேவுடன் இணைந்து ஷாஹீர் ஷேக் நடித்துள்ள பவித்ர ரிஷ்டா 2 (Pavitra Rishta 2) வெப் தொடர் வரும் செப்டம்பர் 15ம் தேதி ஜீ 5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











