ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கானுக்கு சவால் விட்ட பிரதீப் ரங்கநாதன்.. டிராகன் இந்தி ரிலீஸ் தேதி இதோ!
மும்பை: பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த மாதம் இந்தியில் அமீர்கான் மகன் நடித்து வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், டிராகன் படத்தை இந்தியில் நேரடியாகவே ரிலீஸ் செய்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்த ஏஜிஎஸ் நிறுவனம் வரும் மார்ச் 14ம் தேதி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் டைட்டிலில் அந்த படத்தை வெளியிடுகின்றனர்.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஜெயம் ரவியை தொடர்ந்து பிரதீப் யாரை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், லவ் டுடே படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார்.

அவருடன் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் நோ சொல்லிவிட இவானாவை ஹீரோயினாக்கி நடித்து ஹிட் கொடுத்தார்.
டிராகன் படத்தில் 3 ஹீரோயின்கள்: லவ் டுடே படம் 100 கோடி வசூல் ஈட்டியதும் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடிக்க நடிகைகள் போட்டிப் போட்டு வந்தனர். அவரது 2வது படமான டிராகன் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் என 2 நடிகைகளும் கிளைமேக்ஸில் இவானாவும் கேமியோவாக வந்து நடித்திருந்தார். டிராகன் திரைப்படமும் 120 கோடி வசூலை தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்து இந்திக்கும் போக ரெடியாகிவிட்டார்.
3 கான்களுக்கும் சவால்: ஏற்கனவே தென்னிந்தியாவில் இருந்து பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், யஷ் என பலர் கான் நடிகர்களின் கலெக்ஷனுக்கு வேட்டு வைத்து வரும் நிலையில், நானும் இந்திக்கு வருகிறேன் என ஷாருக்கான் சார், சல்மான் கான் சார், அமீர்கான் சார் ஐ எம் ஆன் தி வே என ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் இந்தி டிரைலரை வெளியிட்டு ஃபன்னாக குறிப்பிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
இந்தியில் ஹிட் அடிக்குமா?: தமிழ் மற்றும் தெலுங்கில் டிராகன் படம் வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில், பல ஆண்டுகள் கழித்து இந்தியில் ரீமேக் செய்வதை விட உடனடியாக இந்த படத்தை டப் செய்து இந்தி ரசிகர்களுக்கு கொண்டு செல்வது தான் சரியான ஒன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர். தமிழ் டிரைலரை போலவே இந்தி டிரைலரும் பக்காவாக உள்ளது. பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு இந்தி ரசிகர்களுக்கு ராஞ்சனாவில் தனுஷ் நடிப்பை பார்த்து பிடித்துப்போனது போல பிடித்துவிட்டால் இவரும் பான் இந்தியா ஹீரோவாகி விடுவார் என்கின்றனர்.
எல்ஐகே எப்போ பாஸ் வரும்?: டிராகன் படத்துக்கு முன்பாகவே பிரதீப் ரங்கநாதன் கமிட்டானது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் தான். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்குப் பிறகு அஜித்தின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், க்ரித்தி ஷெட்டியை வைத்து இயக்கி வரும் எல்ஐகே படம் எப்போது வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீக்கிரமாக அந்த படத்தை முடித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டாலே போதும் வெற்றி பெற வைப்பதை பிரதீப் ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











