எப்போதும் ‘கிஸ்‘தான்… இது ஒன்னும் புதுசு இல்ல… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
மும்பை : பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் தாறுமாறாக முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரியங்கா சோப்ரா.
டைம் ஊடகத்தின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் மற்றும் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்து உள்ளார்.

பிரியங்கா சோப்ரா
தமிழில் நடிகர் விஜய் உடன் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். தமிழில் பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து பாலிவுட்டிற்கு சென்ற பிரியங்கா பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அனைத்துப்படங்களும் வெற்றி பெற்றதை அடுத்து பாலிவுட்டிலேயே செட்டிலாகி விட்டார். மேலும் இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது பிரியங்கா சோப்ரா ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலகின் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

காதல் திருமணம்
நடிகை பிரியங்கா சோப்ரா தன்னைவிட 10 வயது குறைவான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறிவிட்டார். நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றடுத்து உள்ளனர்.

பொது இடத்தில் லிப் லாக்
இந்நிலையில், பொது இடத்தில் பிரியங்காவும் நிக் ஜோன்ஸும் தாறுமாறாக முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ராண்டாகி உள்ளது. காருக்குள் அமர்ந்திருக்கும் பிரியங்காவிற்கு அவரது கணவர் வெளியில் இருந்தபடி முத்தம் கொடுக்கிறார். பிரியங்கா என்னத்தான் பிஸியாக இருந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணவருடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

இணைபிரியா ஜோடி
சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைதள பக்கங்களில் தனது பெயருக்குப் பின்னால் இருந்த நிக் ஜோனஸ் என்ற பெயரை நீக்கினார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு, இருவரும் விவாகரத்து செய்யப் போகின்றனர் என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால், நாங்கள் எப்போதும் பிரியமாட்டோம் என்பதை இந்த ஜோடிகள் அவ்வப்போது முத்தம் கொடுத்து நிரூபித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











