குறிவைத்து பாலிவுட்டில் இருந்து ஓரம் கட்டப்பட்டேன்.. பிரியங்கா சோப்ரா ஆதங்கம்!

மும்பை : பாலிவுட்டில் நான் குறிவைத்து ஓரம் கட்டப்பட்டேன் என்று பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.

மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ரா 2002ம் ஆண்டு தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார்.

நடிகை பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களில் மாஸ் காட்டிய பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது சிறியவரான பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு வாடகைத்தாய் முறை மூலம் பெண் குழந்தைக்கு தாயானார். குழந்தை பிறந்த பிறகும் படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் ஓரம் கட்டப்பட்டேன்

பாலிவுட்டில் ஓரம் கட்டப்பட்டேன்

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டிலிருந்து விலகியதற்கான காரணத்தை மனம் திறந்து கூறியுள்ளார். அதில், எனக்கு பாலிவுட்டில் சிலருடன் பிரச்சனை இருந்ததால், பாலிவுட்டில் இருந்து ஓரம் கட்டப்பட்டேன். படிப்படியாக படவாய்ப்புகள் குறைந்தன. அந்த அரசியல் விளையாட்டு எனக்கு பிடிக்கவில்லை, அந்த நேரத்தில் தான் எனக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனால், பாலிவுட்டில் இருந்து விலகிவிட்டேன் என கூறியுள்ளார்.

சீட்டடெல்

சீட்டடெல்

நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது, ஸ்டான்லி டூசி, லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் இணைந்து சீட்டடெல் வெப் தொடரில் நடித்துள்ளார். 6 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரின் முதல் சீசன், ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் வாரம் தோறும் வெளியாக உள்ளது. இந்த வெப் தொடர், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

சினிமாவில் 22 ஆண்டுகள் பணியாற்றி உள்ள பிரியங்கா சோப்ரா, 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 2 டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். சீட்டடெல் தொடரில் ஆண் நடிகர்களுக்கு நிகராக அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அந்த வெப்தொடரில் நடித்த சக நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X