ஆண்களுக்கு நிகரான சம்பளம்.. ‘’சீட்டடெல்’’ நடித்ததில் பெருமையடைகிறேன்.. பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி
சென்னை :பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, சீட்டடெல் வெப்தொடரில் ஆண்களுக்கு நிகராக வாங்கி சம்பளம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா, ஹாலிவுட் படங்கள் மற்றும் ஹாலிவும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை பிரியங்கா சோப்ரா
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட 10 வயது சிறியவரான பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு வாடகைத்தாய் முறை மூலம் பெண் குழந்தைக்கு தாயானார். குழந்தை பிறந்த பிறகும படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா கணவர் மற்றும் குழந்தையோடு இருக்கும் ரொமான்ஸ் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சீட்டடெல் வெப் தொடரில்
நடிகை பிரியங்கா சோப்ரா தற்போத, ஸ்டான்லி டூசி, லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் இணைந்து சீட்டடெல் வெப் தொடரில் நடித்துள்ளார். 6 எபிசோடுகள் கொண்ட அந்த முதல் சீசன், ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் வாரம் தோறும் வெளியாக உள்ளது. இந்த வெப் தொடர், சீட்டடெல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

பிரியங்கா சோப்ரா பேட்டி
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள, நடிகை பிரியங்கா சோப்ரா, சினிமாவில் 22 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். இதுவரை 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 2 டிவி தொடர்களிலும் நடித்துள்ளேன். ஆனால் சீட்டடெல் தொடரால் மட்டுமே என் வாழ்க்கை மாறியுள்ளது. எனக்கு என்று தனி அங்கி காரம் கிடைத்துள்ளது. ஏனென்றால் இந்த தொடரில் தான் ஆண் நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கியுள்ளேன். இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

நியாயமான சம்பளம்
மற்ற படங்களிலும் இதே அளவிலான உழைப்பை கொடுத்திருந்தேன். ஆனால் குறைவான ஊதியமே கிடைத்தது. ஆனால், சீட்டடெல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அதற்கான சம்பளம் கொடுப்பது நியாயமானது என்று அமேசான் தரப்பில் கூறினர். நீங்கள் சொல்வது சரிதான். இது நியாயமான ஊதியம் தான் என்று அவர்களுக்கு பதில் அளித்தேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











