twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலிவுட்டில் இனவெறி அதிகம்.. கருப்பாக இருக்கும் நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லை.. ரஜினி பட நடிகர் பகீர்!

    |

    மும்பை: பாலிவுட்டில் நிறவெறி அதிகம் உள்ளது என பிரபல நடிகரான நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

    பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடித்த வருகிறார் நவாசுதீன் சித்திக்.

    8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா! 8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா!

    வெப் சீரிஸ்களிலும் பிஸியாக உள்ள நடிகர் நவாசுதீன் சித்திக் தமிழில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்தார்.

    நவாசுதீன்

    நவாசுதீன்

    இந்த படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் இதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களிலும் நடித்து வருகிறார் நவாசுதீன் சித்திக். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் நடிகர் நவாசுதீன் சித்திக்

    இனவெறிதான் அதிகம் உள்ளது

    இனவெறிதான் அதிகம் உள்ளது

    இந்நிலையில் பாலிவுட்டில் நிறவெறி அதிகம் இருப்பதாக நடிகர் நாவசுதீன் சித்திக் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், கூறியிருப்பதாவது, பாலிவுட் பட உலகில் நட்புறவுடன் பழகுவது இல்லை. இங்கு இனவெறிதான் அதிகம் உள்ளது.

    தோலின் நிறத்தை பார்க்கிறார்கள்

    தோலின் நிறத்தை பார்க்கிறார்கள்

    கருப்பாக இருக்கும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு அளிக்காமல் ஒதுக்குகிறார்கள். படம் நன்றாக வர, படம் ஹிட்டாக திறமையானவர்களை நடிக்க வைக்கவேண்டும். திறமையானவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் இங்கு அந்த நிலைமை இல்லை. தோலின் நிறத்தை பார்க்கின்றனர்.

    என்னையும் நிராகரித்தார்கள்

    என்னையும் நிராகரித்தார்கள்

    நான் உயரம் குறைவாக இருந்ததால் என்னையும் பல வருடங்களாக நிராகரித்தார்கள். ஆனால் நடிப்பு திறமையால் இப்போது எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தி பட உலகில் நிலவும் இந்த இனவெறியை எதிர்த்து நான் பல வருடங்களாக போராடி வருகிறேன். பல பெரிய நடிகர்களும் இனவெறியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.. இவ்வாறு பாலிவுட் சினிமா குறித்து குற்றம்சாட்டியுள்ளார் நவாசுதீன் சித்திக்.

    வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம்

    வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம்

    ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் போதை பொருள் புழக்கம் அதிகம் உள்ளது, வாரிசு அரசியல் உள்ளது, பாலிவுட் சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் மற்றும் முன்னணி நடிகர்களின் ஆதிக்கமே அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றனர். இந்நிலையில் நிற வெறியும் இருப்பதாக நடிகர் நவாசுதீன் சித்திக் கூறியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Racism is there in Bollywood says actor Nawazuddin Siddiqui. He says Chances not given to dark skinned actress.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X