மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன்.. ரஜினி பட நாயகி ஓபன் டாக்!

சென்னை : மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக ரஜினி பட நடிகை மனம் திறந்து கூறியுள்ளார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி மற்றும் வெற்றிச்செல்வன், தோனி படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே.

இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா ஆப்தா, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

2005ம் ஆண்டு இந்தியில் வெளியான வா லைஃப் ஹோ டோ ஹைசி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இதையடுத்து, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ரத்த சரித்திரம் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.

அழகுதான் முக்கியம்

அழகுதான் முக்கியம்

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ராதிகா, ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் திறமையை விடஅழகுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு பெண் இளமையாக இருக்கும் போது அவளுக்கு வாய்ப்புகள் வருகின்றன.

இளமைக்குதான் மவுசு

இளமைக்குதான் மவுசு

ஒரு நடிகை 30 வயதை கடந்து விட்டால், அவளின் உடல் தோற்றம் கேலிக்குள்ளாக்கப் படுகிறது. பட வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. இதில் சில நடிகைகள் 30 வயதுக்கு மேலும் சினிமாவில் நடித்து வந்தால், அவருக்கு வயதாகிவிட்டது என்று பலர் குரல் கொடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். இதனால் , தான் பல நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து தங்கள் உடலை இளமையாக வைத்திருக்கிறார்கள்.

மிகுந்த மன அழுத்தத்தில்

மிகுந்த மன அழுத்தத்தில்

நான் ஒப்பந்தமாகி இருந்த பல படங்களில் என்னை நீக்கிவிட்டு, மற்ற நடிகைகளை ஒப்பந்தம் செய்கிறார்கள். இதனால், பல பட வாய்ப்புகள் என்னை விட்டு சென்றுவிட்டன. இதனால், நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். சினிமாவில் அழகுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவதால் பல திறமையான நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாக ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

Recommended Video

நடிகை Poorna-க்கு விரைவில் திருமணம் ! மாப்பிள்ளை இவரா ? #Celebrity |Filmibeat Tamil
இரு படங்கள் மட்டுமே

இரு படங்கள் மட்டுமே

ராதிகா ஆப்தே தற்போது இந்தியில் உருவாகி வரும் விக்ரம் வேதா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், இயக்கநர் வாசன் பாலா இயக்கத்தில் "மோனிகா ஓ மை டார்லிங்" என்ற படத்திலும் ஹூமா குரோஷியுடன் இணைந்து லீட் ரோலில் நடித்து வருகிறார். இந்த இரு திரைப்படங்களைத் தவிர இவருக்கு பெரிதாக எந்த படமும் கைவசம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X