பல கோடி ரூபாய் சொத்தை மனைவி பெயருக்கு மாற்றிய பிரபலம்.. காரணம் என்ன ?
மும்பை : ராஜ் குந்த்ரா ரூ.38.5 கோடி மதிப்புள்ள பிளாட்டை தனது மனைவி ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றி உள்ளார்.
ஜூஹூவில் உள்ள ஓஷன் வியூ என்ற பில்டிங் மொத்தம் 5 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பாகும்.
இதன் மொத்த பரப்பளவு 5,996 சதுர அடியாகும். இடத்தின் மதிப்பு ஸ்கொயர் ஃபீட் 65000 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது

ஆபாச வழக்கு
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும், இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்தார் ராஜ்குந்தரா.

விவாகரத்து
ராஜ் குந்த்ரா தான் முக்கிய குற்றவாளி என்றும் மும்பை காவல்துறை தெரிவித்திருந்த நிலையில், ஷில்பா ஷெட்டி சில நாட்களாக வெளியில் தலைகாட்டாமல் இருந்தார், இதையடுத்து, குழ்ந்தையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஷில்பா விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஷில்பா ஷெட்டியின் பெயரில்
இந்நிலையில் ராஜ் குந்த்ரா, தனது பெயரில் இருந்த 38.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது மனைவி பெயருக்கு மாற்றியுள்ளார். மும்மை ஜூஹு கடற்கரை வியூவில் 5 பிளாட்ஸ்களை கொண்ட பில்டிங்கை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளார்.

பிரிந்துவிடக் கூடாது
இந்த சொத்துப் பதிவு கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றதாக தெரிகிறது. மேலும் பேஸ்மெண்ட் உட்பட ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ள இடத்தின் மதிப்பு ஸ்கொயர் ஃபீட் 65000 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வழக்கு பிரச்சனை என உள்ள நிலையில் ஷில்பா ஷெட்டியின் பாதுகாப்பு மற்றும் அவர் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக அவரது பெயருக்கு சொத்து மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரொம்ப பிஸி
ஷில்பா ஹங்காமா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் பரேஷ் ராவல், ராஜ்பால் யாதவ் மற்றும் பிற நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷில்பா, கீதா கபூர் மற்றும் இயக்குனர் அனுராக் பாசுவுடன் இணைந்து சூப்பர் டான்சர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மேலும், சோனி டிவியில் கிர்ரோன் கெர் மற்றும் ராப்பர் பாட்ஷாவுடன் இணைந்து இந்தியாவின் காட் டேலண்டிற்கு நிகழ்ச்சியிலும் நடுவர் என மிகவும் பிஸியாகவே இருக்கிறார் ஷில்பா ஷெட்டி.


Click it and Unblock the Notifications











