twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆபாச பட வழக்கு.. .2 மாதங்களுக்கு பின் ஜெயிலிலிருந்து வெளியே வந்த ராஜ்குந்த்ரா!

    |

    மும்பை : பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா ஜூலை 19ந் தேதி மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் ஆபாச பட வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    ஆபாச படங்களை தயாரித்து, செல்போன் செயலிகளில் வெளியிட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த குற்றச்சாட்டின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

    வடிவேலுவுக்கு நாய் சேகர் டைட்டில் கிடைக்காதது ஏன்... உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன் வடிவேலுவுக்கு நாய் சேகர் டைட்டில் கிடைக்காதது ஏன்... உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்

    2 மாதங்களுக்கு பிறகு ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ராவுக்கு மும்பை கோர்ட்டில் ஜாமீன் வழங்கியதை அடுத்து இன்று அவர் ஜெயிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

    மோசடி புகார்

    மோசடி புகார்

    கடந்த பிப்ரவரி மாதம் சில பெண்கள், தங்களை வெப் தொடரில் நடிக்க அழைத்து ஆபாச படத்தில் நடிக்க வைத்து மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் மும்பை குற்றப்பிரிவு போலீசார் சிலரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் நடத்தி வந்த தீவிர விசாரணையில் முக்கிய குற்றவாளியாக ராஜ்குந்த்ரா சிக்கினார்.

    பெண்களை மிரட்டி ஆபாச படம்

    பெண்களை மிரட்டி ஆபாச படம்

    ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ரா உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின. சினிமா மோகத்தில் உள்ள பல பெண்களை நைசாக அணுகி வெப் தொடர், குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்துள்ளனர். திகில் உள்ளிட்ட காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி பின்னர் அரை நிர்வாணம், முழு நிர்வாண காட்சிகளில் நடிக்க கட்டாயப்படுத்தி உள்ளனர். நடிக்க மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் படப்பிடிப்புக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு உள்ளது, நடிக்க முடியாவிட்டால் அந்த பணத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

    ஜாமீன் மனு

    ஜாமீன் மனு

    இந்நிலையில் தொழிலதிபர் ராஜ்குந்த்ரா மற்றும் ரியான் தோர்பே ஆகியோர் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது போலீசார் 1500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.மேலும், ராஜ் குந்த்ரா ஹாட் ஷாட்ஸ் என்ற ஆன்லைன் தளத்தை வைத்திருந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்த.

    எந்த ஆதாரமும் இல்லை

    எந்த ஆதாரமும் இல்லை

    இதையடுத்து, ராஜ் குந்த்ரா தனது ஜாமீன் மனுவில், தன்னை ஒரு பலிகடாக ஆக்கிவிட்டதாகவும், ஆபாச பட வழக்கில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் ராஜ்குந்த்ராவுக்கும், அவரது கூட்டாளி ரியான் தோர்பேவுக்கும் வழங்கியது.

    இரண்டு மாதங்களுக்கு பிறகு

    இரண்டு மாதங்களுக்கு பிறகு

    இதையடுத்து, ஜூன் 19ந் தேதி கைதான ராஜ்குந்த்ரா 2 மாதங்களுக்கு பிறகு ஜெயிலிலிருந்து வெளியே வந்தார். ஷில்பா ஷெட்டியின் பையன் ரவி ஜெயிலுக்கு சென்று உடைகளை கொடுத்தார். சிறையிலிருந்து வெளியே வந்த ராஜ் குந்த்ரா உணர்ச்சி வசப்பட்டு கண்ணீருடன் காணப்பட்டார். ஊடக செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களை தவிர்த்துவித்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி வீடு திரும்பினார்.

    English summary
    The businessman Raj Kundra was arrested on July 19 by the Mumbai Police and after two months in jail. Raj Kundra has returned home after a Mumbai court granted him bail
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X