அடுத்த விவகாரத்தா ?... மாஸ்டர் பிளான் போட்டு சொத்தையும் மனைவிக்கு மாற்றிய பிரபலம் !

மும்பை : சமந்தா விவகாரத்து புயல் அடக்குவதற்குள், தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது.

புயலுக்கு பின் அமைதி வரும் என்று பார்த்தால் பாலிவுட்டில் அடுத்த டைவோர்ஸுக்கு தயாரான பிரபலம் குறித்த ஹாட் அப்டேட் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

மனைவியை பிரிய மனமில்லாத அந்த பிரபலம் மாஸ்டர் பிளான் போட்டு அனைத்து சொத்தையும் தனது மனைவி பெயருக்கு மாற்றி உள்ளார்.

சமந்தா

சமந்தா

படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்து, கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா சமந்தாவின் திருமணம் நடந்தது.

பிரிந்தனர்

பிரிந்தனர்

இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை 'எஸ்' என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. இது வெறும் வதந்தியாகவே முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 2ம் தேதி இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இருவரின் பிரிவு ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.

தனுஷ் ஐஸ்வர்யா

தனுஷ் ஐஸ்வர்யா

அதேபோல, மனம் ஒத்த தம்பதிகளாக 18 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த தனுஷ், ஐஸ்வர்யாக தம்பதிகள் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தாரும், நண்பர்களும் ஈடுபட்டுள்ளனர்.

மனைவிக்கு சொத்து

மனைவிக்கு சொத்து

இப்படி திரைப்பிரபலங்களின் அடுத்த விவகாரத்தால் திரைத்துறையே கவலையில் ஆழ்ந்து இருக்கும் நிலையில், பாலிவுட்டில் அடுத்த பிரபலம் விவகாரத்து தகவல் வெளியாகி உள்ளது. ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, தனது பெயரில் இருந்த 38.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது மனைவி பெயருக்கு மாற்றியுள்ளார். மும்மை ஜூஹு கடற்கரை வியூவில் 5 பிளாட்ஸ்களை கொண்ட பில்டிங்கை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளார். இடத்தின் மதிப்பு ஸ்கொயர் ஃபீட் 65000 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாகவும், இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஜாமீனில் வெளியே வந்தார் ராஜ்குந்தரா. இதனால், கணவர் மீது ஷில்பா அதிர்ப்தியில் உள்ளார். இதனால்,மனைவி தன்னைவிட்டு பிரிந்து விடாமல் இருக்க தனது பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் மனைவியின் பெயருக்கு மாற்றி மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் ராஜ்குந்தரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X