பிட்டு பட விவகாரத்தில் சிக்கிய தயாரிப்பாளர்.. என் மனைவி பெயரை மட்டும் இழுக்காதீங்கன்னு ஒரே புலம்பல்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் சிக்கி ஏற்கனவே சிறைக்கு சென்று வந்துள்ளார். மேலும், பணமோசடி விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது அம்மா மீது புகார்கள் எழுந்தன. அதுதொடர்பாக 90 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கத்துறையினர் முடக்கியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 29ம் தேதி மீண்டும் ராஜ் குந்த்ரா வீட்டில் அதிரடியாக அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். இந்நிலையில், தனது மனைவி ஷில்பா ஷெட்டியின் பெயரை சம்பந்தமில்லாமல் யாரும் இழுக்க வேண்டாம் என காட்டமாக பதில் அளித்துள்ளார் ராஜ் குந்த்ரா.

shilpa shetty raj kundra bollywood

பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் ஷில்பா ஷெட்டி. விஜய் நடித்த குஷி படத்திலும் மேக்கோரினா பாடலுக்கு ஷில்பா ஷெட்டி நடனமாடியிருப்பார்.

50 வயதிலும் ஹாட்னஸ்: 1993ம் ஆண்டு வெளியான பாஸிகர் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து பாலிவுட்டில் அறிமுகமானவர் தான் ஷில்பா ஷெட்டி. ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஷில்பா ஷெட்டி சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், மீண்டும் 2021ம் ஆண்டு வெளியான ஹங்காமா 2 படத்தில் இருந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், கேடி எனும் கன்னட படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 50 வயதிலும் படுகவர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை வெளியிடுவது, யோகா வீடியோக்களை வெளியிடுவது என அலப்பறையை கிளப்பி வருகிறார்.

பிட்டு பட விவகாரம்: ஷில்பா ஷெட்டியின் காதல் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து சட்ட விரோதமாக வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்து சம்பாதித்து வந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார். ஷெர்லின் சோப்ரா உள்ளிட்ட ஆபாச பட நடிகைகள் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டாலும் தனது கணவரை ஜாமீனில் வெளியே எடுக்க ஷில்பா ஷெட்டி ரொம்பவே போராடி வந்த நிலையில், அவர் மீதும் தொடர்ந்து நெட்டிசன்கள் வன்மத்தை கக்கி வருகின்றனர்.

மனைவியை இழுக்காதீங்க: நவம்பர் 29ம் தேதியான நேற்று மீண்டும் ராஜ் குந்த்ரா வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை நடத்திய நிலையில், மீண்டும் ஷில்பா ஷெட்டி கணவர் என்றும் ஷில்பா ஷெட்டியை பற்றியும் ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தன்னுடைய மனைவியின் பெயரை யாரும் டேமேஜ் செய்யவோ இழுக்கவோ கூடாது என்றும் அவருக்கு இதில் எந்த சம்மந்தமும் இல்லை என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X