முதல்ல ரன்பீர் கபூர்... அப்புறம்தான் மகேஷ்பாபு... பாகுபலி இயக்குநரின் வேற லெவல் திட்டம்

ஐதராபாத் : இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்கள் அவருக்கு உலகளவிலான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.

தற்போது இவரது இயக்கத்தில் பொங்கலையொட்டி வெளியாக இருந்த ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

இந்நிலையில் அவர் தனது அடுத்தப்படத்திற்கான திட்டங்களை மேற்கொள்வதில் பிசியாக உள்ளார்.

இயக்குநர் ராஜமௌலி

இயக்குநர் ராஜமௌலி

இயக்குநர் ராஜமௌலி பிரம்மாண்டமான அதிலும் வரலாற்று பின்னணியில் படங்கள் எடுப்பதில் மிகவும் சிறப்பாக உள்ளார். குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தன.

ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

படத்தில் பிரம்மாண்டத்தை சிறப்பாக இறக்கியிருந்தார் ராஜமௌலி. அரசர் காலத்தை கண் முன்னே கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் தற்போது இவரது இயக்கத்தில் உருவாகி ரிலீசுக்கு காத்திருக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் தற்போது கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட கதைக்களம்

சுதந்திர போராட்ட கதைக்களம்

இந்த முறை ராஜமௌலி கையில் எடுத்திருப்பது சுதந்திர போராட்ட காலத்தின் கதைக்கருவை. படத்தின் டீசர், ட்ரெயிலர்கள், பாடல்கள் உள்ளிட்டவை மிரட்டலாக அமைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளில் வெளியாக இருந்தது இந்தப் படம்.

தள்ளிப் போன ரிலீஸ்

தள்ளிப் போன ரிலீஸ்

படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை சரியானால் மட்டுமே படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த படத்தில் பிசி

அடுத்த படத்தில் பிசி

இந்நிலையில் ராஜமௌலி தனது அடுத்த படம் குறித்த வேலைகளை தற்போது திட்டமிட்டு வருகிறார். மகேஷ் பாபுவை வைத்து பிரம்மாண்டமாக தனது அடுத்த படத்தை அவர் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்கும் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத்தே கதை எழுதி வருகிறார்.

ரன்பீர் கபூரை இயக்கும் ராஜமௌலி?

ரன்பீர் கபூரை இயக்கும் ராஜமௌலி?

இந்நிலையில் இந்தப் படத்திற்கு முன்னதாக பாலிவுட்டில் ரன்பீர் கபூரை வைத்து அவர் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தை விரைவில் முடித்துவிட்டு மகேஷ் பாபு படத்தில் ராஜமௌலி கவனம் செலுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X