முழுசா கவர் பண்ற மாதிரி டிரஸ் அணிய வேண்டும்.. ஆர்டர் போட்ட காதலன்.. பிரபல நடிகை ஓபன் டாக் !
மும்பை : தனது புதிய காதலன் ஆதில், எனக்கு ஆடைகளை தேர்ந்தெடுக்க தெரியவில்லை என்றும், முழுசா கவர் பண்ற மாதிரி டிரஸ் அணிய வேண்டும் என ஆர்டர் போட்டுள்ளதாக நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.
இவர், ஆண் நண்பருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது, அரைகுறை ஆடை, ஆபாச ஆட்டம், எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவார்.
இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

பிக்பாஸ்
சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 14 மற்றும் சமீபத்தில் முடிந்த சீசன் 15 நிகழ்ச்சியிலும் ராக்கி சாவந்த் கலந்து கொண்டுள்ளார். ஆனால், ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாவும் தனக்கு அற்புதமான கணவர் கிடைத்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

கணவரை பிரிந்தார்
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரித்தேஷ்ஷை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதுடன், அவர் மீது அவரது முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார் என்பதும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, காதலர் தினத்தன்று தனது கணவரை விட்டு பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தார்.

புது காதலன்
இந்நிலையில் ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். மேலும், ஆதில், அவரது குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அவரது குடும்பத்தில் இருந்து சில எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மேலும், தனது கடந்த காலத்தைப் பற்றியும் அவரிடம் எதையும் மறைக்காமல் கூறிவிட்டேன்.

ஆர்டர் போட்ட காதலன்
ஆதிலின் குடும்பத்தினருக்கு நான் கவர்ச்சியான உடை அணிவது பிடிக்கவில்லை என்றார். ஆதிலும் என் வேலை தொடர்பாக எந்த கட்டுப்பாட்டையும் வைக்கவில்லை. ஆனால், ஆடைகளை தேர்ந்தெடுக்க தெரியவில்லை என்றும், முழுசா கவர் பண்ற மாதிரி டிரஸ் அணிய வேண்டும் என ஆதில் கூறியதாக நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.

அவரின் அன்பை நேசிக்கிறேன்
ஆதில் கான் தனக்கு பிஎம்டபிள்யூ கார் கொடுத்ததைப் பற்றி அவர் பதிவிட்டுள்ளார், மேலும் அடில் துபாயில் தனது பெயரில் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். கார் மற்றும் வீட்டை விட அவரின் அன்பை தான் அதிகம் மதிக்கிறேன் என்றும் தனது காதலர் குறித்து புகழ்ந்துள்ளார் ராக்கி சாவந்த்.


Click it and Unblock the Notifications











