10 செ.மீ.. கருப்பைக் கட்டி.. ராக்கி சாவந்த்துக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை.. இப்போ எப்படி இருக்கிறார்?

மும்பை: முதல் கணவர் ரித்தேஷ் சிங்குடன் விவாகரத்து பெற்றதை அடுத்து அதில் கான் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ராக்கி சாவந்த். ஆனால், அந்த திருமணமும் அவருக்கு சரியாக அமையவில்லை. 2வது கணவரை விவாகரத்து செய்ததை ஆட்டம் போட்டு கொண்டாடிய ராக்கி சாவந்துக்கு சமீபத்தில் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ராக்கி சாவந்தின் முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் தான் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்து சிகிச்சை பார்த்துள்ளார். ஆரம்பத்தில் நெஞ்சுவலி மற்றும் வயிற்று வலி எனக் கூறி வந்த அவர், ராக்கி சாவந்துக்கு கருப்பையில் டியூமர் கட்டி இருப்பதாக தெரிவித்தார்.

கருப்பை புற்றுநோயாக அது இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், நேற்று முன் தினம் ராக்கி சாவந்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருப்பதாக ரித்தேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை: 1997ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அக்னிசக்ரா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ராக்கி சாவந்த். சுடாலி நம்பர் 1, குருக்‌ஷேத்ரா, 6 டீன்ஸ், தம், சரத்குமார் நடித்த கம்பீரம், பைசா வசூல், ஏக் கஹானி ஜூலி கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ராக்கி சாவந்த் பல படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதி: கடந்த வாரம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கருப்பையில் தற்போது டியூமர் இருப்பதாக அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். Uterus Tumour என மருத்துவர்கள் சொன்னாலும், கருப்பை புற்றுநோய் இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிர்ச்சியை கிளப்பினர். ஆனால், தற்போது கருப்பை டியூமருக்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.

வீடியோ மெசேஜ்: நடிகை ராக்கி சாவந்த் அறுவை சிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டருக்குள் செல்வதற்கு முன்னதாக எடுத்த வீடியோவை ரசிகர்களுக்கு ஷேர் செய்திருந்தார். மேலும், தனது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங்குக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார். கண்ணீருடன் திரும்ப தான் வரவேண்டும் என பிரார்த்தனை செய்யும்படி ரசிகர்களிடம் ராக்கி சாவந்த் கோரிக்கை வைத்தார்.

10 செ.மீ., கட்டி அகற்றம்: மே 19, 2024 அன்று, அவரது கருப்பையில் இருந்து 10 செமீ பெரிய கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ராக்கி சாவந்த் தன் வாழ்வில் சந்தித்த பெரும் சவால் குறித்து அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைவதற்கு முன்பு ராக்கியின் தருணங்களை படம்பிடித்து உணர்ச்சிவசப்பட்ட வீடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ராக்கி சாவந்த் பதிவு: தனது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட கட்டியையும் ரசிகர்களுக்கு காட்டி தனக்காக பிரார்த்தனை செய்த திரையுலக நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ராக்கி சாவந்த் கூறியுள்ளார். தற்போது நலமாக இருப்பதாகவும் சில நாட்கள் ஓய்வில் இருந்து விட்டு மீண்டும் உங்களை மகிழ்விக்க வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

{quiz_1545}

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X