“திருமணம் விளையாட்டு அல்ல“… கணவரை பிரிந்த… பாலிவுட் நடிகை கண்ணீர் பேட்டி !

மும்பை : கணவரை விட்டு பிரிவதாக அறிவித்த பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், திருமணம் என்பது விளையாட்டு அல்ல என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மாடல் அழகியான ராக்கி சாவந்த், பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இந்தி,தெலுங்கு, கன்னடம், மராத்தி, தமிழ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ராக்கி சாவந்த்

ராக்கி சாவந்த்

சால்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 14 மற்றும் சமீபத்தில் முடிந்த சீசன் 15 நிகழ்ச்சியிலும் ராக்கி சாவந்த் கலந்து கொண்டுள்ளார். ஆனால், ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாவும் தனக்கு அற்புதமான கணவர் கிடைத்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ரித்தேஷ்ஷை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து, ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதுடன், அவர் மீது அவரது முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார் என்பதும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

பிரிந்து அறிவிப்பு

பிரிந்து அறிவிப்பு

இதையடுத்து, காதலர் தினத்தன்று தனது கணவரை விட்டு பிரிந்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நாளில் இந்த முடிவெடுத்ததில், நான் வருந்துகிறேன். மனம் உடைந்துவிட்டது என கூறியிருந்தார். அவரின் அந்த பதிவு இணையத்தில் பேசு பொருளானது.

சட்டப்பூர்வமான திருமணம் அல்ல

சட்டப்பூர்வமான திருமணம் அல்ல

இந்நிலையில், கணவரை பிரிந்தது குறித்து பேட்டி அளித்துள்ள ராக்கி சாவந்த், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் நாங்கள் எங்கள் வாழ்க்கையை அழகாக தொடங்கினோம். திடீரென அவர், மனைவிடமிருந்து விவகாரத்து கிடைக்கவில்லை, இதனால் சட்டசிக்கல் வந்துவிடும் என கூறிவிட்டு, அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

திருமணம் விளையாட்டு அல்ல

திருமணம் விளையாட்டு அல்ல

நான் செய்து கொண்ட திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை என்பதால், பிரிவு முடிவை எடுத்ததாகவும், அவருக்காக எப்போதும் காத்திருப்பேன். மனைவி குழந்தைகளோடு வாழ நினைத்தாலும் அவர் நன்றாக வாழட்டும் என்றார். ஆனால், திருமணம் என்பது விளையாட்டு அல்ல என கண்ணீர் மல்க கூறினார் ராக்கி சாவத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X