ரன்பீர் கபூர், ஆலியா பட்.. காதல் ஜோடிக்கு திருமணம்.. களைகட்டும் மும்பை… யார் யார் வராங்க தெரியுமா?
மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டுக்கும் இந்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதால், மும்பை களைகட்டத்தொடங்கி உள்ளது.
நடிகை ஆலியாவின் தாத்தா ரஸ்தான் உடல் நிலை மோசமாக உள்ளதால் இவர்களது திருமணத்தை விரைந்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோலாகலமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதால், திருமண விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ரன்பீர் கபூர், ஆலியா பட்
பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இருவரும் காதல் குறித்து வாய் திறக்காமல் மௌனமாக இருந்தனர். சில நாட்களுக்கு முன்பு தான் காதலிப்பதாக இந்த ஜோடி வெளிப்படையாக தெரிந்தது. தற்போது இவர்களது திருமணம் குறித்த செய்தி வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதம் திருமணம்
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம் ஏப்ரல் 13 முதல் 17 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணம் எங்கே நடைபெறும், திருமணத்தில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்பதை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, திருமணத்தில் கலந்து கொள்ளும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கலந்து கொள்ளும் பிரபலங்கள்
இயக்குநர்கள் கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பன்சாலி, ஜோயா அக்தர், வருண் தவான் அவரது சகோதரர் ரோஹித் தவானும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், நடிகர்கள் வரிசையில் ஷாருக்கான், நீது கபூர், ரித்திமா கபூர் சாஹ்னி, கரீனா கபூர் கான், சைஃப் அலி கான், கரிஷ்மா கபூர், மகேஷ் பட், முகேஷ் பட் மற்றும் சோனி ரஸ்தான் ஆகியோர் திருமண விழாக்களில் கலந்து கொள்ள உள்ளனர்.

மும்பையில் கோலாகலமாக திருமணம்
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரது திருமணம் மும்பையின், செம்பூர் பகுதியிலுள்ள ஆர்.கே.ஹவுசில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஏற்கனேவே இவர்களது திருமணத்தை உதய்ப்பூரில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இவர்களின் குடும்பம் மும்பையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் திருமண கொண்டாட்டத்திற்காக இப்போதே மும்பை களைகட்டத்தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











