என்னது ஏப்ரல்லயா?... பாலிவுட்டில் கல்யாணத்துக்கு தயாராகும் அடுத்த காதல் ஜோடி
மும்பை : நடிகர் ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
இவர்களின் திருமணம் கொரோனாவால் தள்ளிப் போயுள்ளது.
இந்நிலையில் வரும் ஏப்ரலில் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

ரன்பீர் கபூர் -ஆலியா பட்
நடிகர் ரன்பீர் கபூர் அவ்வப்போது பல நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், ஆலியா பட்டுடன் இவரது காதல் உறுதியானது. இதை இவர் வெளிப்படையாக பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தினார். தாங்கள் இருவரும் திருமணத்திற்கு தயாராக உள்ளதாகவும் அறிவித்தார்.

கடந்த ஆண்டில் திருமணம்
அடுத்தடுத்து கத்ரினா உள்ளிட்ட ஜோடிகள் தங்களது திருமணத்தை முடித்து வரும் நிலையில் அடுத்ததாக ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமணத்தை பாலிவுட் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த ஆண்டிலேயே இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.

தள்ளிப் போன திருமணம்
ஆனால் கொரோனா பரவல் காரணமாக இவர்கள் திருமணம் தள்ளிப் போனது. பாலிவுட்டின் பிரபல நடிகரான ரிஷிகபூரின் மகனான ரன்பீர் கபூர் பாலிவுட்டில் சிறப்பான ஹீரோவாக வலம் வருகிறார். இதேபோல இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட்டும் முன்னணி நடிகையாக உள்ளார்.

கடந்த ஆண்டில் திருமணத்திற்கு திட்டம்
கடந்த 2019ல் இவர்களது திருமணம் நடைபெறவிருந்த நிலையில் ரிஷிகபூர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் திருமணம் தடைப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் இவர்கள் திருமணம் அறிவிக்கப்பட்டது. ஆனால் திருமணத்தை அவசர அவசரமாக நடத்தும் திட்டமில்லை என்று இருவரும் அறிவித்திருந்தனர்.

ஏப்ரலில் திருமணம்?
இந்நிலையில் தற்போது ஏப்ரல் மாதத்தில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராஜஸ்தானின் ரன்தம்போரில் உள்ள ஒரு ரெசார்ட்டில் இவர்கள் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கத்ரினாவின் திருமணமும் ராஜஸ்தானின் ரெசார்ட் ஒன்றில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு?
இந்த திருமணத்தையொட்டி இரண்டு குடும்பங்களிலும் கருத்து வேறுபாடு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதை அவர்கள் மறுத்துள்ளனர். இதனிடையே, திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுவது வதந்தி என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

கொரோனாவால் தள்ளிப் போன திருமணம்
கொரோனா பரவல் மட்டும் இல்லையென்றால் இருவருக்கும் கடந்த ஆண்டிலேயே திருமணம் நடந்திருக்கும். ஆனால் பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள இவர்களின் திருமணம் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருப்பது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி வருகிறது.

ரசிகர்கள் குஷி
இதனிடையே ஏப்ரலில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுவது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. தற்போது ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர், ராக்கி ஆர் ராணி கி ப்ரேம் கஹானி, டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா, கங்குபாய் கத்தியாவாடி போன்ற படங்களின் ரிலீசுக்காக ஆலியா காத்திருக்கிறார். இதேபோல, ஷாம்ஷரா, பிரம்மாஸ்திரா படங்களை ரன்பீர் எதிர்நோக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











