Animal Box Office: அடேங்கப்பா.. 500 கோடி வசூலை கடந்த அனிமல்.. விமர்சனங்களுக்கு எல்லாம் ஒரே மிதி!

மும்பை: 3 மணி நேரம் 21 நிமிஷம் ஓடுற படத்தை யார் பார்ப்பா என்றும் இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட ஆணாதிக்க கிரிஞ்ச் விஷயங்களை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா வைத்துள்ளார் என கடுமையாக விமர்சகர்கள் அனிமல் படத்தை அட்டாக் செய்திருந்தான்ர்.

ஆனால், அர்ஜுன் ரெட்டி படத்தையே ஹிட் ஆக்கியவன் நான் என காலரை சும்மா தூக்கி விட்டுக் கொண்டு அதை விட ஆட்சேபத்துக்குரிய பல காட்சிகளை படம் முழுக்க வைத்திருந்தாலும், வசூலில் அனிமல் படம் சக்கைப் போடு போட்டு வருகிறது.

Ranbir Kapoor and Rashmika Mandannas Animal movie crosses 500 crores at Box Office

டிசம்பர் 1ம் தேதி வெளியான அனிமல் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் பாலிவுட் திரையுலகுக்கு இன்னொரு வெற்றிப் படமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டை காப்பாற்றிய 4 படங்கள்: இந்த ஆண்டு பாலிவுட்டில் பல படங்கள் வந்தாலும், ஷாருக்கான் நடித்த பதான், ஜவான் உள்ளிட்ட படங்கள் மட்டுமே தலா 1000 கோடிகளுக்கு மேல் வசூல் ஈட்டி பாலிவுட்டை காப்பாற்றின. மேலும், சன்னி தியோலின் கதர் 2 மற்றும் ரன்பீர் கபூரின் அனிமல் படங்கள் 500 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் படங்களாக மாறியுள்ளன.

இந்தியாவில் இத்தனை கோடியா?: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் நடித்த அனிமல் படம் கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியான நிலையில், முதல் நாளே 116 கோடி வசூலை ஈட்டியது. வார நாட்களிலும் படத்தின் வசூல் குறையாமல் ரியல் அனிமலாக பாக்ஸ் ஆபிஸில் இதுவரை இந்தியாவில் மட்டும் 312.96 கோடி ரூபாய் வசூலை 6 நாட்களில் ஈட்டியுள்ளது.

500 கோடியை கடந்து: உலகளவில் அனிமல் திரைப்படம் இதுவரை 527.6 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. பிரம்மாஸ்திரா திரைப்படம் 400 கோடியில் எடுக்கப்பட்டு 431 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. அதிகபட்சமாக ரன்பீர் கபூர் நடித்த படங்களிலேயே ராஜ்குமார் ஹிரானி இயக்கிய சஞ்சு படம் தான் 588 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இந்நிலையில், அனிமல் திரைப்படம் அதனை முறியடித்து முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X