ரிஷி கபூர் மறைவு.. ஆத்ம சாந்தி பூஜை.. மகன் ரன்பீர் கபூர் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்பு!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் கடந்த ஏப்ரல் 30ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு குடும்பத்தினர் ஆத்ம சாந்தி பூஜை செய்துள்ளனர்.
பாபி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ரிஷி கபூர். அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்தும் போட்டி போட்டும் பல படங்களில் நடித்துள்ளார்.
ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூரும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இரண்டு ஆண்டுகளாக
கடந்த 2018ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரிஷி கபூர், பூரண குணமடைந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். தீபிகா படுகோனேவை வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கவும் ரிஷி கபூர் திட்டமிட்டு இருந்தார்.

கொரோனா வைரஸ்
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸையும் நாம் வென்று மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவோம் என்றும் கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 29ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

காலமானார்
ஆனால், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 30ம் தேதி ரிஷி கபூர் மரணமடைந்த செய்தி, பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏப்ரல் 29ம் தேதி மற்றொரு பிரபல பாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் மறைவு பாலிவுட்டை உலுக்கிய நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக இவரது இழப்பு ஏற்பட்டது.
Recommended Video

ஆத்ம சாந்தி பூஜை
இந்நிலையில், ரிஷி கபூரின் இல்லத்தில் நடைபெற்ற ஆத்ம சாந்தி பூஜையில் மனைவி நீத்து கபூர், மகன் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ரித்திமா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரிஷி கபூரின் புகைப்படத்திற்கு அருகில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நீத்து கபூர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











