ஆலியா பட் படம் ஹிட்..கணவர் நடித்த ஷாம்ஷேரா பிளாப்..ரன்பீர் கபூரை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

மும்பை : ரன்பீர் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷாம்ஷேரா திரைப்படம் வெளியான இரண்டு நாளில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான ரன்பீர் கபூரின் முதல் பான் இந்திய திரைப்படம் இதுவாகும். ஷாம்ஷேரா நாடு முழுவதும் 4000 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, யுனைடெட் கிங்டம், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏராளமான காட்சிகளுடன் உலகம் முழுவதும் படம் வெளியானது.

ஷாம்ஷேரா

ஷாம்ஷேரா

1800 ஆம் ஆண்டு கற்பனை நகரமான காசாவை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், இரக்கமற்ற சர்வாதிகாரி ஜெனரல் ஷுத் சிங் மக்களை அடிமைப்படுத்தி சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வருகிறார். அவர்களின் தலைவனாக போர் வீரராக ரன்பீர் கபூர் கதாபாத்திரம் அமைந்துள்ளது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

ரன்பீர் கபூர், சஞ்சய் தத், வாணி கபூர் ரோனித் ராய், சவுரப் சுக்லா மற்றும் அசுதோஷ் ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கரண் மேத்தாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'ஷாம்ஷேரா'வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியான நிலையில், இத்திரைப்படம் இரண்டு நாட்களில் மிகவும் குறைவான வசூலை பெற்றுள்ளது. படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களால் ஷாம்ஷேரா திரைப்படம் திரையரங்கில் போராடி வருகிறது.

வசூல் சரிந்தது

வசூல் சரிந்தது

ஷாம்ஷேரா திரைப்பட முதல் நாளில் சுமார் 10.25 கோடியாக இருந்த நிலையில், 2 ஆம் நாள் வசூல், 9.8கோடியாக சரிந்தது. ரன்பீர் கபூரின் மனைவி ஆலியா பட் நடித்த கங்குபாய் கதியாவாடியை விட 2வது நாளில் குறைவாகவே வசூலாகி உள்ளது. வரலாற்று காவியமான இத்திரைப்படம் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இந்த வசூல் அதிகரிக்குமா என்று பொருத்திருத்துதான் பார்க்க வேண்டும்.

கங்குபாய் கத்தியவாடி

கங்குபாய் கத்தியவாடி

ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி பாக்ஸ் ஆபிஸில் புயலைக் கிளப்பியது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்திற்கு திரையரங்கில் அதிக வரவேற்பு இருந்தது. இத்திரைப்படம் 2ஆம் நாள் படம் மொத்தம் ரூ 23.82 கோடி வசூல் செய்தது. கங்குபாய் கத்தியவாடி படம் ஹுசைன் ஜைதியின் மும்பையின் மாஃபியா குயின்ஸ் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். இரண்டு படங்களையும் கம்பேர் செய்து ரசிகர்கள் ஆலியா படம் ஹிட், ரன்பீர் படம் பிளாப் என்று ரன்பீரை கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X