ரன்பீரை பிடித்து இழுத்து முத்தம் கொடுக்க முயன்ற பெண்.. நைசாக நழுவிய நடிகர்.. கதறி அழுத பெண்!

மும்பை : ஜூதி மெயின் மக்கார் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த ரன்பீர் கபூரின் கை பிடித்து இழுத்து முத்தம் கொடுக்க வந்த பெண்ணிடம் இருந்து நைசாக விலகி ஓடினார்.

மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகன் தான் ரன்பீர் கபூர், இவர், இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

பாலிவுட்டின் வாரிசு நடிகர்களான இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்பீர்

பாலிவுட் நடிகர் ரன்பீர்

பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலராக இருந்த ரன்பீர் ஆலியா ஜோடி தற்போது பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.

வசூலை அள்ளிய பிரம்மாஸ்திரா

வசூலை அள்ளிய பிரம்மாஸ்திரா

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பிரம்மாஸ்திரா முதல் பாகம் செப்டம்பர் மாதம் இந்தி, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியானது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அபிதாப் பச்சன், ஷாருக்கான், மௌனி ராய் ஆகியோர் நடித்திருந்தனர். கரண் ஜோஹர் தயாரித்த இப்படம் முதல் நாளிலேயே 75 கோடி வசூலித்த நிலையில், 450 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

தூ ஜூதி மெயின் மக்கார் படத்தில்

தூ ஜூதி மெயின் மக்கார் படத்தில்

பிரம்மாஸ்திரா படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, தூ ஜூதி மெயின் மக்கார் திரைப்படத்தில் நடித்துள்ளார். லவ் ரஞ்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர், அனுபவ சிங் பாஸி, டிம்பிள் கபாடியா, போனி கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 8ந் தேதி வெளியாக உள்ளது.

ரன்பீருக்கு முத்தம் கொடுக்க முயன்ற பெண்

தூ ஜூதி மெயின் மக்கார் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்பீர் கபூரை பெண் ஒருவர் செல்பி எடுக்க வந்து அவரின் அருகே நின்று போட்டோவும் எடுத்துக்கொண்டார். செல்பி எடுத்தது மட்டுமில்லாமல், அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றார். இதை சுதாரித்துக்கொண்ட ரன்பீர், அந்த பெண்ணிடம் இருந்து நைசாக நழுவினார். ஆனாலும், விடாத அந்த பெண் ரன்பீரின் டி ஷர்ட்டை பிடித்து இழுத்து கையில் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதன் பின் ரன்பீருடன் இருக்கும் போட்டோவை பார்த்த அந்த பெண் ஆனந்தத்தில் கதறி அழுதார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X