தோளில் நிரந்தரமாக மகளை சுமக்கும் ரன்பீர் கபூர்.. எப்படின்னு நீங்களே கொஞ்சம் பாருங்களேன்!

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த நட்சத்திர ஜோடியினருக்கு ராஹா எனும் அழகிய மகள் பிறந்துள்ளார். இந்நிலையில், எபோதுமே தனது மகளை தோளில் சுமக்க வேண்டும் என நினைத்த ரன்பீர் கபூர் செய்திருக்கும் வேலை பாலிவுட் பிரபலங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் 917.82 கோடி ரூபாய் வசூலை உலக அளவில் ஈட்டியது. ஷாருக்கானுக்கு பிறகு பாலிவுட்டை காப்பாற்ற யாருமே இல்லையா என எதிர்பார்த்த நிலையில், நான் இருக்கிறேன் என அடுத்த உச்ச நட்சத்திரமாக ரன்பீர் கபூர் மாறியுள்ளார்.

Ranbir Kapoor Alia Bhatt tatoo Ramayana bollywood

அக்ஷய் குமார், சல்மான்கான், அமீர்கான், ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பிரபலங்களின் படங்கள் சமீபத்தில் வெளியாகி தொடர்ந்து தோல்வியை தழுவி வருகின்றன. ஷாருக்கானை தொடர்ந்து பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்தியது ரன்பீர் கபூர் தான். இந்நிலையில், பாக்ஸ் ஆபீஸில் தனக்கான இடத்தைப் பதிக்க வேண்டும் என்பதற்காக ராமாயணம் படத்தை கையில் எடுத்து நடித்து வருகிறார்.

Ranbir Kapoor Alia Bhatt tatoo Ramayana bollywood

சிக்ஸ் பேக் வைத்த ராமர்: ஏற்கனவே பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ஆதி புருஷ் திரைப்படம் ராமாயணத்தை தழுவி உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் சிக்ஸ் பேக் வைத்த ராமராக ரன்பீர் கபூர் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி சீதா கதாபாத்திரத்தில் நடித்த வருவது குறிப்பிடத்தக்கது. யஷ் ராவணனாக நடிப்பதாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ranbir Kapoor Alia Bhatt tatoo Ramayana bollywood

மகள் மீது பாசம்: எந்த ஒரு தந்தைக்கு மகள் மீது பாசம் இல்லாமல் இருக்கும். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் தனது மகள் மீது அளவற்ற பாசத்தைக் கொண்டுள்ள நிலையில் மகளை எப்போதும் தனது தோளில் தாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அவரது பெயரை டாட்டூவாக குத்திக் கொண்டிருக்கிறார்.

மகள் மீது பாசம்: எந்த ஒரு தந்தைக்கும் மகள் மீது பாசம் இல்லாமல் இருக்கும். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் தனது மகள் மீது அளவற்ற பாசத்தைக் கொண்டுள்ள நிலையில் மகளை எப்போதும் தனது தோளில் தாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக அவரது பெயரை டாட்டூவாக குத்திக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X