Ranbir Kapoor Net Worth: 42 வயதில் இத்தனை கோடி சொத்து இருக்கா?.. ரன்பீர் கபூர் ராஜ்ஜியம்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீர் கபூர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறக்கும் போதே தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு கோடீஸ்வரராக பிறந்த ரன்பீர் கபூர் பாலிவுட்டில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகும் போது ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தார்.

ஆனால், தொடர்ந்து தனது அசுரத்தனமான உழைப்பால் பாலிவுட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகராக மாறியுள்ளார் ரன்பீர் கபூர். பால் டப்பா, அமுல் பேபி என ரன்பீர் கபூரை கலாய்த்து வந்த ரசிகர்கள் எல்லாம் அனிமல் படத்தில் அவரது ஆக்ரோஷமான நடிப்பை பார்த்த பின்னர் அனிமல் பார்க் படத்திற்காக காத்திருக்கின்றனர்.

ranbir kapoor net worth alia bhatt

தூம் 4 படத்தில் ஷாருக்கானுக்கு பதிலாக ரன்பீர் கபூர் தான் நடிக்கப் போவதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரன்பீர் கபூரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

ரன்பீர் கபூர் பிறந்தநாள்: பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மற்றும் நீது சிங் தம்பதியினருக்கு கடந்த 1982ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி மகனாக பிறந்தவர் தான் ரன்பீர் கபூர். இன்று நடிகர் ரன்பீர் கபூர் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்துக் கொண்டார் ரன்பீர் கபூர். சமீபத்தில், இந்த தம்பதியினருக்கு ரஹா எனும் அழகிய மகள் பிறந்துள்ளார். தனது குடும்பத்துடன் ரன்பீர் கபூர் 42வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

ranbir kapoor net worth alia bhatt

சொத்து மதிப்பு: 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமான ரன்பீர் கபூர் சினிமாவில் 17 ஆண்டுகளாக ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி உள்ள நிலையில், இதுவரை தனிப்பட்ட முறையில் சுமார் 345 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக ரன்பீர் கபூர் தனி ராஜ்ஜியமே நடத்தி வருகிறார். அனிமல் படத்தைத் தொடர்ந்து லவ் அண்ட் வார், ராமாயணம், தூம் 4 என பல படங்களில் நடிக்க உள்ளார்.

ranbir kapoor net worth alia bhatt

சொகுசு கார்கள்: Bentley Continental GT எனும் சொகுசு காரை 5 கோடி ரூபாய்க்கு கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார் ரன்பீர் கபூர். Land Rover Range Rover Autobiography காரின் விலை 3.27 கோடி ரூபாய்க்கும், Audi A8 L கார் 1.71 கோடிக்கும், புதிதாக Lexus LM காரை 2.5 கோடி கொடுத்து சமீபத்தில் வாங்கியிருந்தார் ரன்பீர் கபூர்.

ranbir kapoor net worth alia bhatt

விளையாட்டில் முதலீடு: மும்பையில் கிருஷ்ண ராஜ் பங்களாவை புதிதாக ரெனவேட் செய்து குடும்பத்துடன் வசித்து வரும் ரன்பீர் கபூர் பாந்த்ராவில் 4 பிஎச்கே அபார்ட்மெண்டையும் சொந்தமாக வைத்துள்ளார். புனேவில் 13 கோடி மதிப்பிலான டிரம்ப் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பும் இவருக்கு சொந்தமாக உள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் மும்பை அணியின் 35 சதவீத ஷேர்களிலும் இவர் முதலீடு செய்து வைத்துள்ளார். அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு அடுத்து அதிக ரசிகர்களை கவர்ந்த நடிகராக மாறியுள்ளார் ரன்பீர் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

ranbir kapoor net worth alia bhatt

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X