பெற்றோரை பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டினார்… பிரபல இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் !
மும்பை : பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி பிரபல இயக்குனர் யஷ் சோப்ரா மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சினிமாத்துறை என்றாலே சர்ச்சைகளுக்கு சிறிதும் பஞ்சம் இருக்காது, அதுவும் பாலிட்வுட் என்றால் சொல்லவே வேண்டாம்.
நடிகை ராணிமுகர்ஜி, கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணி முகர்ஜி
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி ராஜா கி ஆயேகி பாராத் என்கிற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராமல் தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, கரண் ஜோகரின் குச் குச் ஹோதா ஹே என்கிற காதல் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு பெயரும் புகழையும் பெற்றுத்தந்தது.

ஹேராம் படத்தில்
இதையடுத்து, மெஹந்தி, மன், ஹலோ ப்ரதர், பாதல் போன்ற திரைப்படங்களில் நடத்தார். மேலும், கமல்ஹாசனுடன் ஹேராம் திரைப்படத்தில், அபர்ணா ராம் திரைப்படத்தில் நடித்து தமிழிலும் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

25 ஆண்டுகள் நிறைவு
திரைத்துறையில் நுழைந்து 25வது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ராணி முகர்ஜி, நான் கடந்து வந்த பாதை குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், முஜ்சே தோஸ்தி கரோகே படத்தின் தோல்வியை அடுத்து , எனக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் வராததால், 8 மாதங்கள் சும்மாவே இருந்தேன்.

கட்டாயப்படுத்தினார்
அந்த சமயத்தில் தான் எனக்கு சாத்தியா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், யஷ் சோப்ரா நீ தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பாய் என்று தொடர்ந்து என்னை கட்டாயப்படுத்தினார். இதனால், என் அப்பா அம்மா யஷ் சோப்ராவை சந்திக்க சென்றார்கள்.

மிரட்டினார்
யஷ் சோப்ரா எனது பெற்றோரை ஒரு அறையில் வைத்து தள்ளி கதவை பூட்டிவிட்டு எனக்கு போன் செய்தார். உன் பெற்றோரை ஒரு அறையில் வைத்துப் பூட்டி உள்ளேன். சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களை வெளியே விடுவேன் என்று மிரட்டினார். அவரின் மிரட்டலுக்கு பயந்துதான் அந்த படத்தில் நான் நடித்தேன் என்றார் ராணி முகர்ஜி. இவரின் இந்த கருத்து பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்தார்
யாஷ் சோப்ரா கடந்த 2012ம் தனது 80வயதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அக்டோபர் 21ந் தேதி உயிரிழந்தார்.


Click it and Unblock the Notifications











