ஆபாசத்தின் உச்சம்.. “பெற்றோர்களுடன் உடலுறவு” வைப்பதா?.. வாயால் கெட்ட பிரபல யூடியூபர்.. என்ன ஆச்சு?

மும்பை: India's Got Talent ஷோவில் பங்கேற்ற பிரபல யூடியூபர் பேசிய ஆபாசமான கருத்துக்கு எதிராக பாஜகவை சேர்ந்த பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், யூடியூபர் ரன்வீர் அல்லபாடியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு எதிராக நாடாளுமன்றம் சார்பிலும் கடும் நடவடிக்கை பாயப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் சமீப காலமாக சினிமாவில் ஆபாசக் காட்சிகளும், வசனங்களும் அதிகளவில் பெருக ஆரம்பித்துள்ளன. மிஷ்கின் போன்ற சில இயக்குநர்கள் பொதுவெளியிலேயே ஆபாசமாக பேசவும் ஆரம்பித்துள்ளனர். சர்ச்சை வெடித்தவுடன் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு வருகின்றனர்.

Ranveer Allahbadia Social media influencer controversy

பிரபல டிவி நிகழ்ச்சியில் "பெற்றோர்களுடன் உடலுறவு" வைத்தேன் என ரன்வீர் அல்லபாடியா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

யாரு இந்த ரன்வீர் அல்லபாடியா?: பீர் பைசப்ஸ் எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் தான் ரன்வீர் அல்லபாடியா. பாலிவுட் பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் என பலரை பேட்டியெடுத்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இவருக்கு 'Disruptor of the Year' விருதை வழங்கினார். மேலும், இரவு நேரத்தில் குறைவாக தூங்கும் நபர்களுக்கு அதிக விழிப்புணர்வை கொடுங்க என அறிவுறுத்தினார். தானும் குறைவாகவே உறங்குவதாகவும் அவரிடம் ஷேர் செய்திருந்தார். ஃபோர்ஸ் பத்திரிகை Forbes 30 எனும் இதழில் 30 வயதில் உலகின் சிறந்த இளைஞர்கள் என்கிற பட்டியலில் இவரையும் இடம்பெறச் செய்திருந்தது.

Ranveer Allahbadia Social media influencer controversy

பெற்றோர்களுடன் உறவு: மோடியிடமே விருது வாங்கிய நிலையில், நாம பேசுவது எல்லாமே சரிதான் என்றும் எதை வேண்டுமென்றாலும் பேசலாம் என நினைத்த ரன்வீர் சமீபத்தில் நடைபெற்ற India's Got Talent ஷோவில் பெற்றோர்கள் உறவு கொள்வதை பார்த்துருக்கீங்களா என்றும் அவர்களுடன் சேர்ந்து அந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளீர்களா என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது ஃபாலோயர்கள் எல்லாம் இவரை கண்டபடி திட்டி இவரை அன்ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவர் மீது காவல்துறை சில பிரிவுகளில் FIR போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சும்மா விடக்கூடாது: நாடாளுமன்றம் சார்பாகவும் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சிவசேனா கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி அழுத்தம் திருத்தமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இவர் மீது ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதற்கு ரன்வீர் மன்னிப்பும் கோரியுள்ளார். ஆனால், காமெடி என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? என்கிற கேள்விகளை பல அரசியல் தலைவர்கள் எழுப்பியுள்ளனர். இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X