ஆத்தி.. படத்துல அந்த சீன் இல்லை.. அந்த சீன்ல தான் மொத்த படமும்.. ஒரே படத்துல 23 முறையா?
மும்பை: ரன்வீர் சிங், வாணி கபூர் நடிப்பில் வெளியான Befikre படத்தை ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான இந்த படம் இளைஞர்களிடையே அதிகமுறை பார்க்கப்பட்ட படமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் ஒரு சூப்பரான மேட்டர் தான்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் மிரட்டலான படங்களிலும் சவாலான படங்களிலும் நடித்து வந்த நிலையில், திடீரென இளமை பொங்க ஒரு ரொமான்டிக் படத்தில் நடிக்க முடிவு செய்தார். குடும்பங்கள் கொண்டாடும் படங்களை இயக்கி வந்த ஆதித்யா சோப்ரா ரன்வீர் சிங்குக்காக திடீரென இப்படியொரு படத்தை இயக்கி பாலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை 2018ல் திருமணம் செய்துக் கொண்ட ரன்வீர் சிங், திருமணத்துக்கு முன்னதாக வாணி கபூருடன் ஜோடி போட்டு படு ஜாலியாக நடித்த படம் தான் பிஃபிகர். அந்த படத்தில் அப்படி என்ன தான் ஸ்பெஷல் என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
ரன்வீர் சிங், வாணி கபூர் கெமிஸ்ட்ரி: தீபிகா படுகோனுடன் ராம் லீலா படத்தில் கூட ரன்வீர் சிங்குக்கு இந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி இருந்ததா? என்கிற கேள்விக்கு இல்லை என்று தான் பாலிவுட் ரசிகர்கள் பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு ரன்வீர் சிங் மற்றும் வாணி கபூர் பக்கா கெமிஸ்ட்ரியை இந்த படத்தில் வொர்க்கவுட் செய்திருப்பார்கள்.

23 முறை: படங்களில் இளைஞர்களை கவர்வதற்காக நடிகையின் உடல் பாகங்களை கவர்ச்சியாக காட்டுவது, பிகினி டிரெஸ் போடுவது, முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என பல விஷயத்தை இயக்குநர்கள் வைப்பார்கள். லிப் லாக் கிஸ் காட்சிகளையும் நடிப்புக்குத்தானே நடித்து விட்டு போவோம் கோடிக் கணக்கில் பணம் வருகிறதே என நடிகர்கள் நடித்து வரும் நிலையில், Befikre படத்தில் அதிகப்படியாக 23 முறை முத்தக் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பழைய படங்களில் 12 பாடல்கள் வருவது போல ஒவ்வொரு காட்சியிலும் காதலி வாணி கபூரை கட்டிப் பிடித்து உதட்டிலேயே முத்தம் கொடுத்து நடித்திருப்பார் ரன்வீர் சிங்.

எத்தனை டேக்குகள்?: படத்திலேயே 23 முறை முத்தக் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், எடிட்டிங்கில் போன முத்தக் காட்சிகள் எத்தனை இருந்திருக்கும். ரிஹர்சல், டேக்குகள் என ரன்வீர் சிங் அந்த படத்தில் நடிக்கும் போது ஜமாய்த்திருப்பாரே என ரசிகர்கள் தற்போதும் அந்த படத்தின் முத்தக் காட்சிகள் குறித்துப் பேசுவது மட்டுமின்றி சோஷியல் மீடியாவில் சில சூடான லிப் லாக் காட்சிகளையும் ஷேர் செய்து வருகின்றனர்.

அனிமல் படத்தை விட: கடந்த ஆண்டு ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த அனிமல் படத்தில் சில இடங்களில் லிப் கிஸ் இடம்பெற்ற நிலையில், அதையெல்லாம் இந்த படம் எப்பவோ தூக்கி சாப்பிட்டு விட்டது என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். தெலுங்கில் இந்த ஆண்டு வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கொடுக்கும் லாங் லிப் கிஸ் தான் அந்த படம் 100 கோடி வசூலை கடக்க காரணமே என்று கூறுகின்றனர். கடந்த ஆண்டு லியோ படத்தில் நடிகர் விஜய் திரிஷாவுக்கும் லிப் கிஸ் அடித்திருப்பார்.


Click it and Unblock the Notifications











