பொண்டாட்டியின் போட்டோவை பார்த்து வாய்யை பிளந்த பிரபல நடிகர்.. என்ன கமெண்ட் கொடுத்திருக்கார் பாருங்க!
மும்பை: பிரபல நடிகர் தனது மனைவியின் போட்டோவை பார்த்து பதிவிட்டுள்ள கமெண்ட் வைரலாகி வருகிறது.
கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் தீபிகா படுகோன். இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன்.
இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து பாலிவுட் சினிமா பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன்.

சர்ச்சைக்குள்ளான பத்மாவதி படம்
இவர் நடித்த பத்மாவதி திரைப்படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'பத்மாவதி' படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்து உலக அளவில் பிரபலமானார் தீபிகா படுகோன். இந்த படத்தில் நடித்ததற்காக எதிர்ப்புகளையும் கொலை மிரட்டல்களையும் சந்தித்தார் தீபிகா. ஆனாலும் அசராமல் துணிச்சலாக பிரச்சனைகளை எதிர்கொண்டார் தீபிகா படுகோன்.

ரன்வீருடன் காதல் - திருமணம்
இதே படத்தில் வில்லனாக நடித்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றும் படங்கள் அடிக்கடி வெளியாகி வந்தன.
இவர்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் தீபிகா படுகோன். தற்போது 83, பதான், சர்கஸ் உள்ளிட்ட ஐந்து படங்களில் நடித்து வருகிறார் தீபிகா படுகோன். சமூக வலைதளங்களிலும் படு ஆக்ட்டிவாக உள்ளார் தீபிகா படுகோன்.

"பாஸ்.. அண்ட் தென் போஸ்!"
இந்நிலையில் தீபிகா படுகோன் இன்ஸ்டாகிராமில் ஒரு மோனோக்ரோம் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதாவது சோஃபாவில் படுத்திருப்பது போன்று போஸ் கொடுத்துள்ளார். மேலும் ஒரு வெள்ளை சட்டை மற்றும் அதன் மேல் ஒரு டெனிம் ஜாக்கெட் அணிந்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு "பாஸ்.. அண்ட் தென் போஸ்!" என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

கணவர் ரன்வீர் சிங் கமெண்ட்
தீபிகா படுகோனின் இந்த போட்டோவை பார்த்த அவரது கணவர் ரன்வீர் சிங் 'ஹாட்டி' என கமெண்ட் கொடுத்துள்ளார். தீபிகா படுகோனின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதனிடையே மேலும் பல ஹாட் போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் தீபிகா படுகோன்.


Click it and Unblock the Notifications