இச்சு.. இச்சுன்னு.. 23 முத்தம்.. இன்னொரு நடிகைக்கு கொடுத்த கணவன்.. தீபிகாவின் ரியாக்‌ஷனை பாருங்க!

மும்பை: நடிகை ஒருவருக்கு 23 முறை நடிகர் ரன்வீர் சிங் கொடுத்த முத்தம் பற்றிய கேள்விக்கு தீபிகா படுகோனே என்ன மாதிரியான ரியாக்‌ஷனை வெளிப்படுத்தினார் என்பது தற்போது வைரலாகி வருகிறது.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL

பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் தம்பதிகளாக தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இருக்கின்றனர்.

பல படங்களில் இணைந்து நடித்த இவர்கள், காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பாலிவுட்டில் டாப்

பாலிவுட்டில் டாப்

டென்மார்க்கில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்த தீபிகா படுகோனே தற்போது பாலிவுட்டின் டாப் நடிகையாக வலம் வருகிறார். ஷாருக்கானின் ஓம் ஷாந்தி ஓம் படத்தில் அறிமுகமான தீபிகா படுகோனே, இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான சபாக் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட கதையில் நடித்து மிரட்டியிருந்தார்.

மோஸ்ட் வான்டட் ஜோடி

மோஸ்ட் வான்டட் ஜோடி

தீபிகா படுகோனேவை போல பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் ரன்வீர் சிங். கடந்த ஆண்டு ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான கல்லி பாய் திரைப்படம் இந்திய அரசின் சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. 2013ம் ஆண்டு வெளியான ராம்லீலா படத்தில் இணைந்து நடித்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பாலிவுட்டின் சிறந்த காதல் ஜோடியாக திகழ்கின்றனர்.

இருவரும் இணைந்து

இருவரும் இணைந்து

2013ம் ஆண்டு வெளியான ராம்லீலா, 2014ம் ஆண்டு ரிலீசான ஃபைண்டிங் ஃபானி, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 2015ம் ஆண்டி பாஜிராவ் மஸ்தானி மற்றும் 2018ம் ஆண்டு வெளியான பத்மாவத் ஆகிய படங்களில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இணைந்து நடித்துள்ளனர். லாக்டவுனுக்கு பிறகு ரிலீஸ் ஆகவுள்ள '83' படத்திலும் இந்த ஜோடி இணைந்து நடித்திருக்கிறது.

23 முத்தங்கள்

23 முத்தங்கள்

கடந்த 2016ம் ஆண்டு ஆதித்யா சோப்ராவின் Befikre படத்தில் நாயகி வாணி கபூருக்கு அதிகப்படியாக 23 முறை லிப் லாக் முத்தங்கள் உள்பட ரன்வீர் சிங் கொடுத்திருப்பார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே ஹாட் லிப் லாக் காட்சிகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், திருமணத்திற்கு முன்னதாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில், இதுகுறித்த கேள்விக்கு தீபிகா படுகோனே பதில் அளித்துள்ளார்.

அது சினிமா முத்தம்

அது சினிமா முத்தம்

இந்த கேள்வி கேட்கப்பட்டவுடன் சிரித்த தீபிகா படுகோனே, பின்னர், அது சினிமா முத்தம், சினிமாவில் யாருக்கு வேண்டுமானால் ரன்வீர் சிங் எத்தனை முறை வேண்டுமானால் அந்த படத்தின் கதைக்கு தேவை இருக்கும் பட்சத்தில் முத்தம் கொடுக்கலாம். ஏன் எனது படங்களில் கூட பல நடிகர்கள் எனக்கு முத்தம் கொடுத்து இருக்காங்களே என்று அசால்ட்டாக கூறியுள்ளார்.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

டிரிபிள் எக்ஸ் 3ம் பாகத்தில் ஹாலிவுட் நடிகர் வின் டீசலுக்கு ஜோடியாக நடித்து அசத்திய தீபிகா படுகோனே அடுத்ததாக டிரிபிள் எக்ஸ் 4ம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள 21வது படத்திலும் தீபிகா படுகோனே தான் நாயகியாம். மகாபாரதம் படத்திலும் திரெளபதியாக நடிக்க பேச்சுவார்த்தைகள் நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X