பெருமைப்படுகிறேன் தீபிகா... முத்தம் கொடுத்து பாராட்டிய ரன்வீர் சிங்… ரொமாண்டிக் புகைப்படம்!

மும்பை : தீபிகாவை நினைத்து பெருமைப்படுகிறேன் என கூறியுள்ள ரன்வீர் சிங், அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்து பாராட்டி உள்ளார்.

தீபிகா, சித்தான்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே, தைர்யா கர்வா, நசீருதீன் ஷா, ரஜத் கபூர் ஆகியோர் நடிப்பில் ஷகுன் பத்ரா இயக்கியுள்ள படம் தான் கெஹ்ரையான்.

இந்தப் படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் தர்மா புரொடக்ஷன்ஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் அமேஸான் இணைந்து தயாரித்துள்ளது.

கெஹ்ரையான்

கெஹ்ரையான்

கெஹ்ரையான் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியான போதே அதில் இடம் பெற்ற முத்தக்காட்சிகள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.இதில், சதுர்வேதி மற்றும் தீபிகா படுகோனுக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டினார்கள்.

ஏ சான்றிதழ்

ஏ சான்றிதழ்

முத்தக்காட்சிகள், அந்தரங்க காட்சிகள் உள்ளதால் இப்படத்திற்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் அளித்தது. இருப்பினும் இந்த படத்திலிருந்து ஒரு சிங்கிள் கட் ஷாட்டைக்கூட படத்துக்கு கட் பண்ண கூறவில்லை என்று கூறப்படுகிறது

கெஹ்ரையான்

கெஹ்ரையான்

கெஹ்ரையான் திரைப்படம் ஒரு முக்கோண காதல் கதை கொண்ட திரைப்படமாகும். இதில், தீபிகா படுகோனே ஒரு ஃபிட்னெஸ் பயிற்சியாளராக உள்ளார் அவரது கணவர் கரன். இந்நிலையில், தீபிகாவின் தங்கை டியாவுக்கு ஜெயினுடன் அதாவது சித்தாந்த்துடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நேரத்தில் ஜெயினுடன் தீபிகாவுக்கு காதல் மலர்ந்து, உறவு சிக்கலாகிறது இது தான் கெஹ்ரையான் திரைப்படத்தின் கதை. அமேசானில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடைய பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

பெருமைப்படுத்திவிட்டாய்

பெருமைப்படுத்திவிட்டாய்

இந்நிலையில், கெஹ்ரையான் படத்தை பார்த்த தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில், அவரை கட்டியணைந்து முத்தம் கொடுத்து, நீயே ... நீயே... இருவரும் ஒன்றே இங்கு இணைந்துள்ளோம். அதிகப்படியான, உயர்ந்த மற்றும் உன்னதமான நடிப்பை பார்த்து வியந்து போனேன். அத்தகைய இதயப்பூர்வமான நடிப்பால், நீ என்னை மிகவும் பெருமைப்படுத்திவிட்டாய் என பதிவிட்டுள்ளார். இந்த ரொமாண்டிக் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X