கபில் தேவாக கலக்கும் ரன்வீர் சிங்.. அட்டகாசமாக வெளியானது ‘83’ டீசர்.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி உள்ள '83' திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் உலக கோப்பையை கைப்பற்றியது.

அந்த வரலாற்று நிகழ்வை இயக்குநர் கபிர் கான் திரைப்படமாக உருவாக்கி உள்ளார். கிறிஸ்துமஸ் வெளியீடாக இந்த படம் வெளியாக காத்திருக்கிறது.

83 டீசர் ரிலீஸ்

83 டீசர் ரிலீஸ்

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள '83' திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட என பான் இந்திய மொழியாக இந்த படம் வெளியாகிறது.

கபில் தேவாக ரன்வீர் சிங்

கபில் தேவாக ரன்வீர் சிங்

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், கல்லி பாய் என பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகர் ரன்வீர் சிங் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில் தேவாக நடித்துள்ள '83' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரில் வெற்றிக்கான வரலாற்று கேட்ச்சை ரன்வீர் சிங் பிடிக்கும் காட்சி இடம்பிடித்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டு படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் ரன்வீர் சிங்.

ராஜ்கமல் வெளியீடு

ராஜ்கமல் வெளியீடு

தமிழில் இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் வெளியிடுகிறது. நடிகர் ஜீவா இந்த படத்தில் கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை தீபிகா படுகோன் கபில் தேவின் மனைவியாக நடித்துள்ளார்.

டிரைலர் எப்போ?

டிரைலர் எப்போ?

கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான 83 பட டீசர் தற்போது வெளியாகி லார்ட்ஸ் மைதானத்தில் 1983ம் ஆண்டு நடந்த வரலாற்று சம்பவத்தை ரசிகர்கள் மத்தியில் மீண்டும் நினைவு படுத்தி வருகிறது. வரும் நவம்பர் 30ம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாகவும் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் ரிலீஸ்

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் உலகளவில் பிரம்மாண்டமாக '83' திரைப்படம் வெளியாக உள்ளது. எம்.எஸ். தோனி அன்டோல்ட் ஸ்டோரி ஈட்டிய வசூலை விட அதிக வசூலை ஈட்ட இந்த படம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரன்வீர் சிங்குக்கு இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X