ஹை ஹீல்ஸ்.. 2 கோடிக்கு வைர நெக்லஸ் மாட்டி வந்த பிரபல நடிகர்.. பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 2 கோடிக்கு வைர நெக்லஸ் அணிந்து வந்த காட்சிகள் இந்தி திரையுலகத்தையும் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடிகை தீபிகா படுகோன் கணவரும் பிரபல இந்தி நடிகருமான ரன்வீர் சிங் போல்டான ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டுகளை அடிக்கடி வெளிக்காட்டி வருகிறார்.

கலர் கலராக கோமாளிகள் அணியும் உடை போல அணிந்துக் கொண்டு வருவது, ஒரு கால் செருப்பு ஒரு டிசைனிலும் இன்னொரு கால் செருப்பு இன்னொரு டிசைனிலும் என ஒரு மாதிரி ஃபேஷன் பைத்தியமாகவே தன்னை வெளிக்காட்டி வருபவர்.

Ranveer Singh wears 2 crore worth Diamond Necklace and High Heels shocks fans

உச்சகட்டமாக அவர் ஆடையே அணியாமல் நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் அவருக்கு துணியை அனுப்பிய அலப்பறைகளும் நடந்துள்ளன.

ஷங்கர் மகள் திருமணத்தில்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதன்பின்னர் அந்த படம் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால், ஷங்கர் மகள் திருமணத்தில் ரன்வீர் சிங் தனியாக கலந்து கொண்டு அதிதி ஷங்கருடன் ஆட்டம் போட்டதை பார்த்தால் விரைவில் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பார் என்றே தெரிகிறது.

விவாகரத்து சர்ச்சை: தீபிகா படுகோனை திருமணம் செய்துக் கொண்ட ரன்வீர் சிங் அவரது திருமண புகைப்படங்களை திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டெலிட் செய்த நிலையில், இருவரும் பிரிய போகிறார்களா? என்கிற கேள்வி பாலிவுட்டில் காட்டுத் தீ போல பரவியது. ஆனால், இருவரும் ஒன்றாகத்தான் உள்ளனர் என்றும் அந்த புகைப்படங்களை ரன்வீர் சிங் டெலிட் செய்ததற்கு பின்னணியில் வேறு காரணம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டு: மும்பையில் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கோட் சூட் அணிந்து கொண்டு படு மாஸாக வந்த ரன்வீர் சிங் கால்களில் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு நடந்து வந்ததை பார்த்து பலரும் பதறிப் போய் விட்டனர். தூக்க கலக்கத்தில் தீபிகா படுகோன் செருப்பை போட்டுக் கொண்டு வந்து விட்டாரா என பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

2 கோடி நெக்லஸ்: முறுக்கு சங்கிலி போல வைர நெக்லஸை கழுத்தில் அணிந்து கொண்டு ரன்வீர் சிங் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் விலை 2 கோடி என தகவல்கள் வெளியான நிலையில், பாலிவுட் நடிகைகளே ஷாக் ஆகிவிட்டனர். ஃபேஷன் விரும்பியான ரன்வீர் சிங் நகைகளுக்காகவும் உடைகளுக்காகவும் பல கோடி ரூபாயை செலவழித்து வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X