Cocktail 2 Box Office: ராஷ்மிகா, கிருத்தி சனோனின் தாராள கவர்ச்சி.. காக்டெயில் 2 முதல் நாள் வசூல் எவ்ளோ?

மும்பை: லவ் ரஞ்சன் திரைக்கதையில் ஹோமி அதஜானியா இயக்கத்தில் ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனா, கிருத்தி சனோன் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான காக்டெயில் 2 (Cocktail 2) திரைப்படம் விமர்சகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது.

இந்நிலையில், பாக்ஸ் ஆபீஸ் வசூலிலாவது படம் பட்டையைக் கிளப்பும் என எதிர்பார்த்த பாலிவுட் வட்டாரங்களுக்கு பெரிதாக முதல் நாள் வசூல் திருப்திகரமானதாக அமையவில்லை என்றே கூறுகின்றனர்.

Rashmika Mandanna and Kriti Sanon starrer Cocktail 2 Day 1 Box Office and Budget details are here
Photo Credit:

முன்னதாக வருண் தவான், பூஜா ஹெக்டே, மிருணாள் தாக்கூர் நடித்த Hai jawani toh ishq hona hai திரைப்படம் பல்பு வாங்கிய நிலையில், இந்த பாலிவுட் படமாவது தப்பிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

காக்டெயில் 2 பட்ஜெட் மற்றும் நடிகர்களின் சம்பளம்: ஹீரோ ஷாகித் கபூர் மற்றும் ஹீரோயின்களாக நடித்த ராஷ்மிகா மந்தனா, கிருத்தி சனோன் உள்ளிட்டோர்களுக்கு ஒட்டுமொத்தமாகவே 35 கோடி தான் சம்பளம் என்கின்றனர். அதில், ராஷ்மிகாவுக்கு மட்டுமே அதிகபட்சம் சம்பளம் எனக் கூறப்படுகிறது. 95 கோடி பட்ஜெட்டில் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றதாகவும் புரமோஷன் மற்றும் விளம்பர செலவுகள் 20 கோடி என ஒட்டுமொத்தமாக 150 கோடி பட்ஜெட்டில் காக்டெயில் 2வை கிளாமர் நுரை பொங்க கிண்டி கொடுத்துள்ளார் இயக்குநர் என்கின்றனர்.

ராஷ்மிகா, கிருத்தி சனோன் கவர்ச்சி தரிசனம்: நீச்சல் உடையில் ராஷ்மிகா மந்தனாவும், கிருத்தி சனோனும் படத்தில் பல காட்சிகளில் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளனர் எனக் கூறுகின்றனர். ஆனால், கிளாமரை தவிர படத்தில் வலுவான கதை இல்லாத நிலையில், படம் பெரிதாக வெற்றி பெறுமா? என்பது சந்தேகம் தான் என பாலிவுட் விமர்சகர்கள் போட்டு பொளந்து வருகின்றனர்.

காக்டெயில் 2 முதல் நாள் வசூல்: இந்தியளவில் இந்த படம் முதல் நாளில் 13.50 கோடி நெட் வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. உலகளவில் சுமார் 20 கோடி வரை ஒட்டுமொத்த வசூலை முதல் நாளில் இந்த படம் ஈட்டியுள்ளது என்கின்றனர். பெரிய ஹைப்புடன் வெளியான நிலையில், 20 கோடி வசூல் எல்லாம் ரொம்ப குறைவு என்கின்றனர்.

லாபமா? நஷ்டமா?: 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீசுக்கு முன்பாகவே ஓடிடி உரிமம், சாட்டிலைட் உரிமம், ஆடியோ ரைட்ஸ் உள்ளிட்ட பிசினஸ்களில் 75 கோடி வரை லாபத்தை ஈட்டியுள்ளதாம். தியேட்டர் வசூல் 75 கோடி வந்தாலே போட்ட முதல் வந்துவிடும் என்கின்றனர். முதல் நாளில் 20 கோடி வசூல் வந்துள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிறு வசூல் அதிகரித்தால் முதல் 3 நாட்களிலேயே 60 முதல் 70 கோடி வரை வசூல் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வரை வசூல் ஈட்டினாலே தயாரிப்பாளர் தப்பித்து விடுவார் என்கின்றனர். ஆனால், வசூல் அதிரடியாக குறைந்தால் தான் கஷ்டம் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X