பங்கம்.. அல்லு அர்ஜுன் தோள்மேல ஏறி ஆடின பொண்ணுய்யா அது.. சல்மான் கான் சுத்தி சுத்தி நடக்குறாரே!

மும்பை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தின் பாடல் வீடியோ ஒன்று வெளியான நிலையில், அதை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் பலரும் புஷ்பா 2 படத்தில் வந்துச்சே பீலிங்ஸ்னு ஆடின ராஷ்மிகா மந்தனாவா இது என கலாய்த்து வருகின்றனர்.

திருமணம் ஆகாமல் இன்னமும் முரட்டு சிங்கிளாக சல்மான் கான் இருந்தாலும் டான்ஸ் ஆடுவதற்கெல்லாம் அவருக்கு கொஞ்சம் கூட உடம்பில் தெம்பு இல்லை என சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்து சிக்கந்தர் படத்தை சின்னா பின்னமாக பங்கம் பண்ணுகின்றனர்.

Salman Khan Sikandar Rashmika Mandanna

ஏற்கனவே படத்தின் டீசரை பார்த்துவிட்டு இது சர்க்கார் படமா? அல்லது ராஷ்மிகா கார்த்தியுடன் நடித்த சுல்தான் படமா? என ஏ.ஆர். முருகதாஸிடம் கேள்விகள் கிளம்பி வரும் நிலையில், சல்மான் கானுக்கு இந்த முறையும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கிடைப்பது டவுட்டு தான் என்கின்றனர்.

சிக்கந்தர் பாடல் ரிலீஸ்: இந்த மாதம் மார்ச் 28ம் தேதி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் ஜோரா ஜபீன் பாடலின் வீடியோ நேற்று வெளியாகி 12 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சல்மான் கான் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ள இந்த பாடலை சல்மான் கான் ஹேட்டர்கள் மற்றும் இணையவாசிகள் இஷ்டத்துக்கு ட்ரோல் செய்து பங்கம் பண்ணி வருகின்றனர்.

Salman Khan Sikandar Rashmika Mandanna

சுத்தி சுத்தி வந்தீங்க: புஷ்பா 2 படத்தில் வந்துச்சே ஃபீலிங்ஸ் பாடலுக்கு அல்லு அர்ஜுன் தோள் மீது ஏறி அமர்ந்துக் கொண்டு அந்த குத்து குத்துன ராஷ்மிகா மந்தனாவை நயன்தாரா நடப்பது போல நடக்கவிட்டுட்டாரே என்றும் அஜித் குமாரின் சவதீகா பாடலின் சீப் வெர்ஷன் போல பாடல் இருப்பதாகவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ராஷ்மிகாவை நிற்க வைத்துவிட்டு அவரை சுற்றி சல்மான் கான் சுத்தி சுத்தி வருவது தான் கொரியோகிராஃபியா என பாலிவுட் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

சிக்கந்தர் ஜெயிக்குமா?: சல்மான் கான் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் எல்லாம் தொடர்ந்து ஃபிளாப் ஆகி வரும் நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இம்மாத இறுதியில் ரம்ஜான் பண்டிகையை டார்கெட் செய்து வெளியாகும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்துவிட்டால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும். ஆனால், வழக்கம் போல சல்மான் கானின் சமீபத்திய படங்களை போல எந்தவொரு கனெக்டிவிட்டியும் இல்லாமல் வெத்து பில்டப்பாக இருந்தால் படம் தப்பிப்பது கஷ்டம் தான் என்கின்றனர்.

மதராஸி என்ன ஆகும்?: சல்மான் கானின் சிக்கந்தர் படத்தின் கதை அவுட்டேட்டட்டான கதையாக இல்லாமல் படம் வின்டேஜ் ஏ.ஆர். முருகதாஸ் படம் போல ஃபயராக இருந்தால் அடுத்து அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராஸி படத்துக்கும் ஹைப் எகிறும். இல்லையென்றால் ஏ.ஆர். முருகதாஸும் ஷங்கர் போல மாறிவிட்டார் என மார்க்கெட்டில் பலத்த அடிவாங்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X