Chhaava Box Office: ராசிக்கார ராஷ்மிகா மந்தனா.. கத்ரீனா கணவர் வாழ்க்கையிலேயே இதுதான் பெரிய வசூல்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கடந்த ஆண்டு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் தோல்வியை தழுவியது. ஆனால், இந்த ஆண்டு ஆரம்பத்தில் அவரது கணவர் விக்கி கவுஷல் நடிப்பில் உருவாகியுள்ள சாவ்வா திரைப்படம் முதல் நாளே மிகப்பெரிய ரெக்கார்டு ஓபனிங்கை பெற்று இந்த ஆண்டு இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே அதிக வசூலை முதல் நாளில் ஈட்டிய படமாக மாறியுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனாவுக்கு சொந்த ஊரில் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், டோலிவுட், கோலிவுட் மற்றும் பாலிவுட் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் அடுத்து தனுஷின் குபேரா படத்தின் மூலமும் ரசிகர்களை கவர காத்திருக்கிறார். இந்தியில் அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே இமாலய வெற்றி பெற்று வரும் நிலையில், நேற்று வெளியான சாவ்வா படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி பாக்ஸ் ஆபீஸிலும் சக்கைப் போடு போட்டு வருகிறது.
விக்கி கவுஷலுக்கு லைஃப் டைம் ஓபனிங்: பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் கணவரும் பாலிவுட் நடிகருமான விக்கி கவுஷல் தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான பிரம்மாண்ட படமான சாவ்வா திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுவரை விக்கி கவுஷல் நடித்த மொத்த படங்களின் ஓபனிங் வசூலையும் ஒரே நாளில் முறியடிக்கும் விதமாக சாவ்வா படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி அமைந்துள்ளது.
முதல் நாள் வசூல்: 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படத்தில் சாம்பாஜி சத்ரபதி மகராஜ் கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்துள்ளார். சிங்கத்தை அடக்கும் காட்சிகள் மற்றும் முகலாய படையினரை எதிர்க்கும் காட்சிகளில் எல்லாம் கர்ஜனையான நடிப்பை பார்த்து ரசிகர்கள் மெய் சிலிர்த்து போய்விட்டனர். முதல் நாளில் 33.1 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளன. முதல் வார முடிவிலேயே 100 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஷ்மிகாவின் ராசி: புஷ்பா 2வுக்கு இந்தி ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது போல இந்த பாலிவுட் படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தால் பல நூறு கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனாவை பாலிவுட் பிரபலங்கள் ராசிக்கார பொண்ணாகவே பார்த்து அடுத்தடுத்த படங்களில் புக் செய்து வருகின்றனர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்திலும் அவர் தான் ஹீரோயின்.



Click it and Unblock the Notifications











