பிக் பாஸ் புதிய சீசனை தடை செய்ய நெட்டிசன்கள் கோரிக்கை.. #BoycottBiggBoss15 டிரெண்டாக காரணம் என்ன?

மும்பை: பிக் பாஸ் இந்தி சீசன் 15 இன்று முதல் ஆரம்பமாக உள்ள நிலையில், அதனை தடை செய்ய வேண்டும் என பாலிவுட் ரசிகர்கள் #BoycottBiggBoss15 டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் இன்று கோலாகலமாக துவங்க உள்ள நிலையில், திடீரென இப்படியொரு ஹாஷ்டேக் ஏன் டிரெண்டாகிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்க போகும் ஒரு நபர் மீது உள்ள அதிருப்தியே இந்த டிரெண்டிங்கிற்கு காரணம் என கூறுகின்றனர்.

இந்தியிலும் ஆரம்பம்

இந்தியிலும் ஆரம்பம்

தமிழில் பிக் பாஸ் சீசன் 5ன் படப்பிடிப்பு இன்று நடைபெற்று நாளை நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 2ம் தேதியான இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆரம்பமாகிறது. இந்த நிகழ்ச்சியை இந்த ஆண்டும் தொடர்ந்து நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.

இரவு 10.30 மணி

இரவு 10.30 மணி

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு சல்மான் கான் வரும் எபிசோடுகள் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என்றும், வார நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழிலும் இதே நேரத்தில் பிக் பாஸ் வந்தால் என்ன செய்ய என்கிற கேள்வியும் தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக் பாஸை தடை செய்

பிக் பாஸை தடை செய்

#BoycottBiggBoss15 என்ற ஹாஷ்டேக்கை பாலிவுட் ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் நடிகர் சல்மான் கான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக் கூடாது என்றும் கொந்தளித்து வருகின்றனர்.

Recommended Video

Priyanka Mohan-ஐ Doctor Pressmeet -ல் வெச்சி செய்த Sivakarthikeyan | Doctor, Nelson Dilipkumar
என்ன காரணம்

என்ன காரணம்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு காரணமானதாக கருதப்படும் நடிகையும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியுமான ரியா சக்கரவர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக வெளியான தகவல்கள் தான் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் புறக்கணிக்க முடிவு செய்ததற்கும் தடை செய்ய கோரிக்கை வைப்பதற்கும் காரணம் எனக் கூறுகின்றனர்.

சர்ச்சை பிரபலங்கள்

சர்ச்சை பிரபலங்கள்

சர்ச்சை நடிகர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்து வருவதையே காலங்காலமாக வழக்கமாக கொண்டு டிஆர்பியை ஏற்றி வருகின்றனர். தமிழில் மீரா மிதுன், தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி என ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சை பிரபலங்களை போட்டியாளர்களாக மாற்றுவதை போலவே ரியா சக்கரவர்த்தி இந்த சீசனில் பாலிவுட்டில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என உத்தேச பட்டியல் வெளியானது தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா

வாரத்திற்கு இவ்வளவு சம்பளமா

சுஷாந்த் சிங் மரணம், போதைப் பொருள் வழக்கில் கைது என ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வந்த ரியா சக்கரவர்த்திக்கு பிக் பாஸ் சீசன் 15ல் போட்டியாளராக பங்கேற்க வாரத்திற்கு 35 லட்சம் வரை சம்பளம் என்று வெளியான செய்திகளும் சுஷாந்த் சிங் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

சுஷாந்துக்கு நீதி கிடைக்கணும்

சுஷாந்துக்கு நீதி கிடைக்கணும்

மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நெட்டிசன்கள் போராடிய நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பாலிவுட் ரசிகர்கள் இந்த பிக் பாஸ் சீசன் 15ல் ரியா சக்கரவர்த்தி கலந்து கொண்டால் அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சல்மான் கான் சம்பளம்

சல்மான் கான் சம்பளம்

மேலும், பிக் பாஸ் சீசன் 15ஐ தொகுத்து வழங்க பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 350 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களையும் ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்து இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து சூப்பர் ஃபிளாப் ஆக்க வேண்டும் என்றும் பொங்கி வருகின்றனர்.

ரசிகர்கள் அதிகம்

ரசிகர்கள் அதிகம்

பிக் பாஸ் இந்திக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் அதிகளவில் உள்ள நிலையில், எந்தவொரு தடையும் நிகழ்ச்சிக்கு வராது என்றும் 14 சீசன்கள் வெற்றி பெற்றது போலவே 15வது சீசனும் மிகப்பெரிய டிஆர்பி வேட்டையை நடத்தி வெற்றி பெறும் என்றும் பிக் பாஸ் இந்தி ரசிகர்கள் மற்றும் சல்மான் கான் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X