twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பா செல்லம்.. ஊரடங்கால் உயிர்பிரியும் நேரத்தில் உடனிருக்க முடியவில்லை.. ரித்திமா கபூர் கண்ணீர்!

    |

    சென்னை: அப்பாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரிஷி கபூரின் மகள் டெல்லியில் இருந்து சாலை மார்க்கமாக மும்பை செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Recommended Video

    Rishi Kapoor demise shook the nation and Bollywood

    புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் நேற்று கடுமையான உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    ஏற்கனவே புற்று நோயால் போராடி வந்த அவர் இன்று காலை மரணமடைந்தார்.

    கடைசி நேரத்தில் கூட.. மருத்துவர்களை மகிழ்வித்த நடிகர் ரிஷி கபூர்..குடும்பம் உருக்கமான அறிக்கை!கடைசி நேரத்தில் கூட.. மருத்துவர்களை மகிழ்வித்த நடிகர் ரிஷி கபூர்..குடும்பம் உருக்கமான அறிக்கை!

    எல்லா அப்பாவையும் போல

    எல்லா அப்பாவையும் போல

    அவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ரிஷி கபூருக்கு அரவது மகள் ரித்திமா கபூர் மீது கொள்ளை பிரியமாம். எல்லா அப்பாவையும் போல ரிஷி கபூரும் தனது மகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.

    பெரும் வேதனை

    பெரும் வேதனை

    இதேபோல் ரித்திமா கபூரும் தனது தந்தையான ரிஷி கபூர் மீது அலாதி பிரியத்துடன் இருந்தார். ரித்திமா டெல்லியில் வசித்து வருகிறார். தனது அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றதுமே பெரும் வேதனை அடைந்தார் ரித்திமா.

    ரித்திமா கண்ணீர்

    ரித்திமா கண்ணீர்

    இந்நிலையில் இன்று தனது தந்தையின் மரண செய்தியை கேட்டு நொறுங்கி போயிருக்கிறராம் ரித்திமா கபூர் . கடைசியாக அப்பாவிடம் பேச முடியவில்லை என்றும் உயிர் பிரியும் நேரத்தில் கூட அவருடன் இருக்க முடியவில்லையே என்று கண்ணீர் விட்டுள்ளார்.

    நேற்று இரவு முதலே

    நேற்று இரவு முதலே

    தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதால் நேற்று இரவு முதலே தனது தந்தையை காண ரித்திமா டெல்லி போலீசாரிடம் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை டெல்லி போலீசார் ரித்திமா மற்றும் அவரது குடும்பத்திற்கு மும்பை செல்ல அனுமதி கொடுத்துள்ளனர்.

    இறுதிச்சடங்கில் பங்கேற்க

    இறுதிச்சடங்கில் பங்கேற்க

    இது தொடர்பாக பேசிய தென்கிழக்கு டெல்லியின் உதவி போலீஸ் கமிஷனரான ஆர்பி மீனா, ரித்திமாக கபூருக்கு இன்று காலை 10.45 மணிக்கு அனுமதி வழங்கியதாக கூறினார். ரிஷி கபூர் இறுதிச்சடங்கில் பங்கேற்க 5 பேர் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

    சாலை மார்க்கமாக

    சாலை மார்க்கமாக

    மேலும் அவர்களின் குடும்பத்தினரை தொடர்பு வேண்டிய உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மூவ்மென்ட் பாஸ்களை மட்டும் வழங்கியிருப்பதாகவும் ட்ரெயின், விமான சேவை இல்லாததால் அவர்கள் சாலை மார்க்கமாக புறப்படுவார்கள் என தெரிகிறது என கூறியுள்ளார்.

    விமான சேவை

    விமான சேவை

    இதனிடையே விரைவாக மும்பை செல்ல ரித்திமா கபூர் விமான சேவையை பெற முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் ரித்திமா தரப்பில் இருந்து அப்படி ஒரு தகவலை பெறவில்லை என டெல்லி ஏர்போர்ட் தெரிவித்துள்ளது. டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே சுமார் 1400 கிலோ மீட்டர் என்பதால் சாலை மார்க்கமாக செல்லும் போது மும்பையை சென்றடைய அதிக நேரம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Riddhima Kapoor gets permission from Delhi police to join in her father's funeral. Sources says that she leaves to Mumbai by road way.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X