'எப்போதும் உங்களை நேசிக்கிறேன் அப்பா' ரிஷி கபூரின் நினைவு கூட்டத்தில் உருகிய மகள் ரித்திமா கபூர்!
சென்னை: மறைந்த நடிகர் ரிஷி கபூரின் நினைவு கூட்டத்தில் பங்கேற்ற அவரது மகள் எப்போதும் உங்களை நேசிக்கிறேன் என உருகியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான ரிஷி கபூர் கடந்த 30 ஆம் தேதி உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். ஏற்கனவே கேன்சருடன் போராடி வந்த அவர் மும்பை ஹெச் என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். லாக்டவுன் அமலில் உள்ளதால் அவரது உடலை வீட்டிற்கு கூட கொண்டு செல்லாமல் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து நேராக அருகில் இருந்த இடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.

ரித்திமா பங்கேற்கவில்லை
ரிஷி கபூர் மருத்துவமனையில் இருந்த போது அவரது மகள் ரித்திமா கபூர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் டெல்லியில் இருந்தார். போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டதால் தந்தையின் இறுதிச் சடங்கில் கூட அவரது செல்ல மகளான ரித்திமாவால் பங்கேற்க முடியவில்லை.

பிரார்த்தனை கூட்டம்
அவர் டெல்லி போலீசாரிடம் அனுமதி பெற்று சாலை மார்க்கமாக வந்து சேருவதற்குள் ரிஷி கபூரின் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது. கடைசியாக அப்பாவின் உடலை கூட பார்க்க முடியாமல் தவித்தார் ரித்திமா. இந்நிலையில் ரிஷி கபூரின் பிரார்த்தனை கூட்டத்திற்கு அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

லவ் யூ ஆல்வேஸ்
இதில் பங்கேற்ற ரித்திமா அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் தனது தந்தையை நினைவு கூர்ந்து உருக்கமாக பல்வேறு பதிவுகளையும் போஸ்ட் செய்திருக்கிறார் ரத்திமா கபூர். அதன் ஒரு பதிவில் தனது தந்தையின் போட்டோவுக்கு பின்னால் நிற்கும் ரித்திமா லவ் யூ ஆல்வேஸ் பப்பா என பதிவிட்டுள்ளார்.

உங்களை நேசிக்கிறோம்
மற்றொரு போட்டோவில், ரித்திமாவும் அவரது சகோதரர் நடிகர் ரன்பீர் கபூரும் கைகளை வணங்கியப்படி அமர்ந்திருக்கின்றனர். "உங்கள் மரபு என்றென்றும் வாழும், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்" என்ற கேப்ஷனுடன் தனது தந்தையை நினைவு கூர்ந்திருக்கிறார் ரித்திமா.

உணர்ச்சிபூர்வமான பதிவு
கடந்த வாரம் நீத்து கபூர் மற்றும் ரன்பீர் கபீர், ரிஷி கபூரின் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வைரலானது. ரிஷி கபூர் இறந்த நாளில், ரித்திமா ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவை பகிர்ந்து கொண்டார்.
Recommended Video

மிஸ் பண்ணுவேன்
அதில் "பப்பா, நான் உங்களை நேசிக்கிறேன், நான் எப்போதும் உங்களை நேசிப்பேன் - என் வலிமையான போர்வீரரின் ஆன்மா சாந்தியடையட்டும். நான் உங்களை ஒவ்வொரு நாளும் மிஸ் பண்ணுவேன். ஒவ்வொரு நாளும் உன் ஃபேஸ்டைம் அழைப்புகளை இழப்பேன்! உங்களிடம் விடைபெற நான் அங்கு இருக்க விரும்புகிறேன்! நாம் மீண்டும் சந்திக்கும் வரை, ப்பா. நான் உங்களை நேசிக்கிறேன் என்றென்றும்" என பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











