நேற்று நீ.. இன்று நான்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் ரிஷி கபூர், இர்ஃபான் கான் புகைப்படம்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர்களான இர்ஃபான் கான் மற்றும் ரிஷி கபூர் இணைந்து நடித்த டி- டே படத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் இர்ஃபான் கான் நேற்று திடீரென உயிரிழந்தது உலகளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரபல நடிகர் ரிஷி கபூரின் மறைவு இந்தியாவையே உலுக்கி வருகிறது.

இருவரும் இணைந்து
பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர், நடிகர் இர்ஃபான் கானுடன் இணைந்து டி டே என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு தர் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நிகில் அத்வானி இயக்கத்தில் அந்த படம் உருவாகி இருந்தது. அர்ஜுன் ராம் பால், ஹூமா குரேஷி, ஸ்ருதி ஹாசன், இர்ஃபான் கான், ரிஷி கபூர் உள்ளிட்டோர் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

வைரலாகும் புகைப்படம்
அந்த படத்தில் கோல்ட் மேன் எனும் டானாக ரிஷி கபூர் மீசையெல்லாம் வைத்து நடித்திருப்பார். அவரை பிடிக்கும் ஏஜென்ட் வாலி கான் கதாபாத்திரத்தில் நடிகர் இர்ஃபான் கான் நடித்திருப்பார். அந்த படத்தில் காரில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து இருவருக்கும் சொர்க்கத்தில் நல்ல இடம் கிடைத்திருக்கும் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

அமைதியாக
இரத்தப் புற்றுநோயால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வந்த பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர், இன்று காலை 8.45 மணிக்கு அமைதியான முறையில் தனது இன்னுயிரை துறந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை என்பதால், பல பாலிவுட் பிரபலங்களும், ரன்பீர் கபூர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவை எதிர்ப்போம்
கடந்த ஏப்ரல் 2ம் தேதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த நேரத்தில் கல் எறிவது உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் யாரும் ஈடுபட வேண்டாம், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, நம்மால் முடிந்த உதவியை செய்வோம் அவர்களுக்கு இடையூறு கொடுக்க வேண்டாம், இந்த கொரோனாவை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என ரிஷி கபூர் பதிவிட்டதை நினைவு கூர்ந்து இயக்குநர் ரத்னகுமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











