ரிஷி கபூரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி.. சிறப்பு விமானத்தில் மும்பை செல்கிறார் மகள் ரித்திகா!

By

மும்பை: தனது தந்தை ரிஷி கபூரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறப்பு விமானம் மூலம், அவர் மகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Rishi Kapoor demise shook the nation and Bollywood

பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் இன்று காலை மரணமடைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடி வந்தவர் அவர்.

2018ஆம் ஆண்டு ரிஷி கபூருக்கு சிகிச்சை அளிப்பதற்காக நியூயார்க் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

புற்றுநோய்

புற்றுநோய்

கிட்டத்தட்ட ஓராண்டு வரை அங்கு தங்கியிருந்து புற்றுநோய்க்குக்கு சிகிச்சை பெற்றார் ரிஷி கபூர். இந்நிலையில் நேற்று மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மும்பை ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பலனின்றி உயிரிழந்தார்.

ஆலியா பட்

ஆலியா பட்

ரிஷி கபூர் இதை உறுதிப்படுத்தினர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், காலை 8.45 அவர் உயிர் பிரிந்ததாகக் கூறியுள்ளனர். அவரது மறைவுக்கு ஏராளமான நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நெருங்கிய உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகை ஆலியா பட்டும் அங்கு அஞ்சலி செலுத்தினார்.

ரித்திகா கபூர்

ரித்திகா கபூர்

இந்நிலையில் மறைந்த ரிஷி கபூரின் மகள் ரித்திகா கபூர், தனது கணவர் பரத் சஹ்னி மற்றும் மகள் சமராவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மும்பை செல்ல வேண்டும் என்றும் அதற்கு சிறப்பு அனுமதி வேண்டும் என்றும் டெல்லி போலீசிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து அவர் சிறப்பு விமானத்தில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

விமானம் மூலம்

விமானம் மூலம்

அவருடன் அவர் கணவர் உட்பட மொத்தம் 5 பேர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு விமானம் மூலம் அவர் மும்பை செல்கிறார். முன்னதாக அவர் சாலை வழியாக மும்பை செல்வதாகக் கூறப்பட்டது. அப்படி சென்றால், இன்று மாலை நடக்கும் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாது என்பதால் விமானம் மூலம் செல்ல அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.

மரைன் லைன்ஸ்

மரைன் லைன்ஸ்

இந்நிலையில் ரிஷி கபூரின் இறுதிச்சடங்கு மருத்துவமனைக்கு அருகில் உள்ள மரைன் லைன்ஸ் சந்தன்வாடியில் இன்று மாலை நடைபெறுகிறது. ரிஷிகபூரின் மகன் நடிகர் ரன்பீர் சிங், மனைவி நீது சிங், ரிஷி கபூரின் சகோதரர் ரன்தீர் கபூர் ஆகியோர் இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X