இன்னொரு பிரேக்கப்.. 4 ஆண்டுகளாக காதலித்து வந்தவரை கழட்டி விட்ட பிரபாஸ் பட நடிகை.. ரசிகர்கள் ஷாக்!

மும்பை: நடிகர் பிரபாஸின் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

டீன் பாட்டி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஷ்ரத்தா கபூர். ஆஷிக்கி 2 படம் மூலம் இந்திய ரசிகர்கள் மனங்களை கொள்ளை அடித்தார் ஷரத்தா கபூர்.

பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் தான் ஷ்ரத்தா கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷிக்கி 2

ஆஷிக்கி 2

2013ம் ஆண்டு மோகித் சூரி இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர் நடிப்பில் வெளியான காதல் படமான ஆஷிக்கி 2 படத்தில் ஹீரோயினாக நடித்து இந்தியளவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் ஷ்ரத்தா கபூர். தொடர்ந்து அவர் நடித்த ஏக் வில்லன், ஏபிசிடி 2ம் பாகி, ஓகே ஜானு உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

பிரபாஸ் ஜோடி

பிரபாஸ் ஜோடி

2019ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்திருப்பார். ஆலியா பட்டை ஆர்ஆர்ஆர் படத்தில் வீணடித்தது போல இல்லாமல் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபாஸுக்கு சரிக்கு சமமாக துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டை போடுவதில் கெத்து காட்டி இருப்பார்

4 ஆண்டுகளாக காதல்

4 ஆண்டுகளாக காதல்

செலிபிரிட்டி போட்டோகிராஃபர் ரோஹன் ஸ்ரெஷ்தாவை கடந்த 4 ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தார் ஷ்ரத்தா கபூர். தன்னைப் பற்றிய பிரைவேட்டான விஷயங்களை சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எதிலுமே அவர் இதுவரை ஷேர் செய்யாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கழட்டிவிட்ட நடிகை

கழட்டிவிட்ட நடிகை

ஆனாலும், இருவரும் டேட்டிங் செய்து வந்த புகைப்படங்கள் பாலிவுட் மீடியாக்களில் வலம் வந்து வைரலாகின. இந்நிலையில், இந்த ஆண்டு பிறந்தநாளை சமீபத்தில் கோவாவில் கொண்டாடிய ஷ்ரத்தா கபூர் உடன் அவரது காதலர் இல்லை என்பது தெரிய வர என்ன ஆனது என விசாரித்ததன் விளைவாக ஷ்ரத்தா கபூரின் காதலரின் நண்பர் இருவரும் கடந்த ஜனவரி மாதமே ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டதாக பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

RRR MOVIE REVIEW | JNTR | Ramcharan | SS Rajamouli | Filmibeat Tamil
அப்பா என்ன சொன்னார்

அப்பா என்ன சொன்னார்

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவரும் கல்லூரி நண்பர்கள் என்றும் ரோஹன் ஸ்ரேஷ்த்தாவின் தந்தை ராகேஷ் ஷ்ரேஷ்த்தாவிடம் ஷ்ரத்தா கபூரை உங்கள் மகன் திருமணம் செய்து கொண்டால் அனுமதிப்பீர்களா? என கேட்டதற்கு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அதற்கு நான் எப்போதுமே தடையாக இருக்க மாட்டேன் என பேசிய பேட்டியும் டிரெண்டாகி வருகிறது. பாகி 3ல் கடைசியாக நடித்திருந்த ஷ்ரத்தா கபூர் அடுத்ததாக ரன்பீர் கபூர் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X