Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கதாநாயகியாக அறிமுகமாகும் சச்சின் டெண்டுல்கரின் மகள்... ஹீரோ யார் தெரியுமா ?
சென்னை : கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் பாலிவுட் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்த சாரா, நடிப்பு பயிற்சியையும் நடத்தி வருகிறார்.
சாரா டெண்டுல்கர் திறமையனவர் என்றும், அவர் திரைப்படத்தி நடித்தால் நிச்சயம் அது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும் பாலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

சச்சின் டெண்டுல்கர்
சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி, 100 சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்த மாபெரும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

காதல் திருமணம்
1990 ம் ஆண்டு டெண்டுல்கர் சர்வதேச விமான நிலையத்தில் அஞ்சலியை சந்தித்துள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஒருவரை ஒருவர் காதலித்து, 1995ம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அஞ்சலி டெண்டுல்கரை விட 6 வயது மூத்தவர் என்பது பலருக்குத் தெரிந்தது. இருப்பினும் வயது வித்தியாசம் அவர்களுடைய திருமண உறவில் எந்த வித்தியாசத்தையும் சச்சரவையும் ஏற்படுத்தவில்லை.

அர்ஜுன் டெண்டுல்கர்
தம்பதிகளுக்கு முன்னுதாரமாக இருக்கும் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு சாரா டெண்டுல்கர் என்ற மகளும், அர்ஜூன் டெண்டுல்கர் என்ற மகனும் உள்ளனர். அவருடைய மகன் அவரைப் போலவே ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார் என்பது நம்பப்படுகிறது. அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.

சாரா டெண்டுல்கர்
இந்நிலையில், மருத்துவ படிப்பை முடித்துள்ள சாரா டெண்டுல்கருக்கு நடிப்பில் ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அவரது தந்தையும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதற்காக சாரா டெண்டுல்கர் நடிப்பு பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் நடிப்பது உறுதியாகி விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றன.
Recommended Video

ஆதாரமற்றவை
சாரா டெண்டுல்கர் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால்., சச்சின் டெண்டுல்கர், தனது மகள் திரைப்படத்தில் நடிப்பது குறித்து வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று கூறியுள்ளதாக தெரிகிறது.