கத்திக்குத்தில் தப்பித்த கரீனா கபூர் கணவர்.. வீடு திரும்பியதும் சைஃப் அலி கான் பார்த்த முதல் வேலை!
மும்பை: பாலிவுட்டில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் சைஃப் அலி கானுக்கு விழுந்த கத்திக்குத்துதான். விஜய் தாஸ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பாந்த்ராவில் இருக்கும் சைஃபின் வீட்டுக்கு திருட வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது சைஃப் அலி கானுக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்தச் சூழலில் சிகிச்சையில் இருந்த சைஃப் அலி கான் இன்று வீடு திரும்பினார். அதுதொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
சைஃப் அலி கான் பாலிவுட்டின் ஃபேமஸ் நடிகர்களில் ஒருவர். பல வருடங்களாக அங்கு தனக்கென தனியிடத்தை பிடித்து தக்க வைத்திருக்கிறார். அவர் நடிகை கரீனா கபூரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் இப்போது ஃபேமஸ் நடிகையாக பாலிவுட்டில் கலக்கிவரும் சாரா அலி கான் என்பது குறிப்பிடத்தக்கது. கரீனா கபூர் - சைஃப் அலி கானுக்கு தைமூர், ஜஹாஹிங்கிர் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் குடும்பத்துடன் பாந்த்ராவில் இருக்கும் சொகுசு பங்களாவில் வாழ்ந்துவருகிறார்கள்.

நடந்த விபரீதம்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 2.30 மணிக்கு ஒருவர் திருட வந்திருக்கிறார். அப்போது அவரை சைஃப் அலி கான் தடுத்து நிறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அந்த சமயத்தில் தான் கொண்டு வந்திருந்த கத்தியால் சைஃபை கண்டபடி குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். உடனடியாக ரத்த வெள்ளத்தில் இருந்த சைஃப் அலி கான் தானே சென்று அருகே இருக்கும் லீலாவதி மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை: அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக தெரிகிறது. முதலில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சில நாட்களில் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு வைத்து சைஃப் அலி கானுக்கு மேற்கொண்டு சில சிகிச்சைகளும், தெரப்பிகளும் கொடுக்கப்பட்டன. இதன் காரணமாக மெல்ல மெல்ல அவர் உடல்நிலை தேறினார். அவரை நலம் விசாரிப்பதற்காக பாலிவுட்டிலிருந்து பெரும்பாலானோர் லீலாவதி மருத்துவமனைக்கு சென்றனர்.
வீடு திரும்பிய சைஃப் அலி கான்: இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சைஃப் அலி கான் இன்று தனது வீட்டுக்கு திரும்பினார். அவருக்கு காவல் துறை பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது. மேலும் சைஃப் அலி கான் வருவதை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அவரது வீட்டுக்கு முன் திரண்டனர். அவர்களை பார்த்து கையசைத்த சைஃப் அலி கான் தான் உடல் நலம் தேறிவிட்டதாக இரண்டு கைகளாலும் தம்ஸ் அப் காட்டியபடி வீட்டுக்குள் சென்றார். அந்த வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய் தாஸ் கைது: இதற்கிடையே சைஃப் அலி கானை கத்தியால் குத்திய நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தார்கள். அவர் மும்பையில் ஒரு மெட்ரோ ஸ்டேஷனின் பின் புறம் இருக்கும் தொழிலாளர் குடியிருப்பில் இருந்தபோது சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தார்கள். அவரது பெயர் விஜய் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











