கரீனா கபூர் கணவருக்கு 6 இடத்தில் காயம்.. நள்ளிரவில் நடந்தது என்ன?.. சிகிச்சையில் சைஃப் அலி கான்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில் அத்துமீறி திருட வந்த திருடர்களுடன் அவரது வீட்டு பணியாளர் வாக்குவாதம் நடத்த சத்தம் கேட்டு அங்கே வந்து அந்த திருடனை தடுக்க முயன்ற சைஃப் அலி கானை கத்தியால் பல முறை குத்திவிட்டு அடையாளம் தெரியாத திருடன் தப்பிச் சென்றுள்ளதாக சைஃப் அலி கான் தரப்பு தெரிவித்துள்ளது.

நடிகை கரீனா கபூரின் கணவரும் பாலிவுட் நடிகருமான சைஃப் அலி கான் கடைசியாக ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வரும் சைஃப் அலி கான் வீட்டின் பலத்த காவலை மீறி எப்படி திருட்டு சம்பவம் நடைபெற்றது என்றும் அவர்களின் முக்கிய நோக்கம் திருடுவது மட்டும் தானா என்கிற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

saif ali khan kareena kapoor

மும்பை லீலாவதி மருத்துவமனையில் 6 காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள சைஃப் அலி கான் அபாய கட்டத்தத்தை தாண்டி விட்டார் என்றும் ரசிகர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சைஃப் அலி கான் தரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சைஃப் அலி கானுக்கு கத்திக்குத்து: பாந்த்ராவில் உள்ள சைஃப் அலி கான் வீட்டில் நடைபெற்ற திருட்டு முயற்சியை தடுக்க நடிகர் சென்ற போது அவரை கத்தியால் குத்திவிட்டு திருடன் தப்பித்துச் சென்று விட்டான் என்றும் சிசிடிவி உதவியுடன் போலீஸார் திருடனை கைது செய்ய தேடுதல் வேட்டையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

saif ali khan kareena kapoor

நலமாக இருக்கிறார்: 3 முறைக்கும் மேல் கத்திக்குத்து நடந்ததாகவும் சுமார் 6 இடங்களில் சைஃப் அலி கானுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் அதிர்ச்சியடைய வேண்டாம் என்றும் இது போலீஸ் விவகாரமாக மாறியிருக்கிறது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்கள் அமைதி காக்க வேண்டும். சைஃப் அலி கான் நலமுடன் தான் உள்ளார் என அவரது தரப்பு அறிவித்துள்ளது.

ஜூனியர் என்டிஆர் ஷாக்: கொரட்டலா சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தேவரா படத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உடன் சைஃப் அலி கான் இணைந்து நடித்திருந்தார். சைஃப் அலி கானுக்கு கத்திக்குத்து நடந்த சம்பவத்தை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் சைஃப் அலி கான் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X