அடுத்த ரம்ஜானுக்கு நான் வரேன்.. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்.. டைட்டில் என்ன தெரியுமா?
மும்பை: கஜினி படத்தை சூர்யாவை வைத்து இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் அதே படத்தில் இந்தியில் அமீர் கானை வைத்து இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்த ஏ.ஆர். முருகதாஸுக்கு கதை திருட்டு பிரச்சனை பெரிய தலைவலியாக மாறியது.
ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ஃபிளாப் ஆன நிலையில், ஏ.ஆர். முருகதாஸுக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் சில ஆண்டுகள் காணாமல் போய் விட்டார்.

மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக அறிவித்து பட வேலைகளை ஆரம்பித்த அவருக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக சல்மான் கான் பட வாய்ப்பு வந்துள்ளது.
கிடப்பில் சிவகார்த்திகேயன் படம்: அமரன் படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் சமீபத்தில் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சல்மான் கான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை சற்று ஹோல்டில் வைத்துவிட்டு சல்மான் கான் படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கடந்த சில மாதங்களாக முடித்த ஏ. ஆர். முருகதாஸ் அந்த படத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளார்.
ரம்ஜான் ட்ரீட்: பாலிவுட் நடிகர் சல்மான் கான் எப்போதுமே ரம்ஜான் பண்டிகையை குறிவைத்து தனது படங்களை ரிலீஸ் செய்வது வழக்கம். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக் படமான கிஸிகா பாய் கிஸிகா ஜான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தனது அடுத்த படத்தில் டைட்டில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில்: தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ் விஜயகாந்தின் ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு விஜய் வயது துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் மகேஷ் பாபுக்கு ஸ்பைடர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தர்பார் என பல படங்களை இயக்கியுள்ளார். கஜினி படத்தை பாலிவுட்டில் அமீர்கானை வைத்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.
துப்பாக்கி படத்தின் ரீமேக்காக அக்ஷய் குமார் நடித்த ஹாலிடே திரைப்படம் வெற்றி பெற்றது. சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அக்கிரா எனும் படத்தையும் இயக்கி இருந்தார். தெலுங்கில் சிரஞ்சீவி வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ஜெய் ஹோ படத்தில் சல்மான்கான் நடித்திருந்தார். ஆனால் அந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவில்லை.
சிக்கந்தர்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு சிக்கந்தர் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்கிற சூப்பரான அறிவிப்பை சல்மான்கான் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ஆண்டு வெளியான படே மியான் சோட்டே மியான் மற்றும் மைதான் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என அல்லாவை வேண்டிக் கொள்வதாக சல்மான் கான் எந்தவொரு ஈகோவும் இல்லாமல் பதிவிட்டு இருப்பது அவரது ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











