SuperStar: எப்படியாவது ஹிட் கொடுக்கணும்... ஒரு பைட் சீனுக்கு 35 கோடி... சூப்பர் ஸ்டார் போட்ட ஆர்டர்
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பதால் டைகர் 3 ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார் சல்மான் கான்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கான் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார்.
இந்நிலையில், சல்மான் கான், ஷாருக்கான் இணைந்து மிரட்டவுள்ள ஒரு பைட் சீன் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.

ஒரு பைட் சீனுக்கு 35 கோடி: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவரது நடிப்பில் வெளியான கிசி கா பாய் கிசி கி ஜான் தோல்வியைத் தழுவியது. இதனால் டைகர் 3 படத்தை எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என சல்மான் கான் வெறித்தனமாக நடித்து வருகிறாராம்.
நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்தப் படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மனீஷ் ஷர்மா இயக்கி வருகிறார். சல்மான் கானுடன் கத்ரீனா கைஃப், ஹிருத்திக் ரோஷன், இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். முக்கியமாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஒரு கேமியோ ரோலில் மிரட்டவுள்ளாராம். ஷாருக்கானின் பதான் படத்தில் டைகர் என்ற ஏஜெண்டாக சல்மான் கான் நடித்திருந்தார்.
ஷாருக்கானை காப்பாற்ற சல்மான் கான் என்ட்ரியாக, ஓடும் ரயிலில் இருவரும் சேர்ந்து ஆக்ஷன் ட்ரீட் கொடுத்தனர். இப்போது அதேபோன்று ஒரு காட்சி டைகர் 3 படத்தில் இடம்பெறவுள்ளதாம். ஜெயிலில் இருக்கும் சல்மான் கானை ஷாருக்கான் வந்து காப்பாற்றுவதாக ஒரு சீன் உள்ளதாம். அப்போது பதான் படத்தைப் போலவே சல்மான் கானும் ஷாருக்கானும் சேர்ந்து பைட் சீனில் நடிக்கவுள்ளார்களாம்.

ஜெயில் செட் போட்டு மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த பைட் சீனுக்காக மட்டும் 35 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம். இதற்காக மும்பையில் செட் போடப்பட்டு உள்ளதாகவும், விரைவில் இந்த பைட் சீன் ஷூட்டிங் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானின் பதான் 1000 கோடி வசூலித்ததை அடுத்து, டைகர் 3 திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டைகர் 3 படத்தில் நடித்து வரும் சல்மான் கான், தனது அடுத்தப் படத்தின் இயக்குநரை தேர்வு செய்துவிட்டதாக தெரிகிறது. அதன்படி அஜித்தின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்த்தனுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரிக்கவிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்தும் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











