சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா ரகசிய திருமணம்… தீயாய்பரவும் புகைப்படம் !
மும்பை : பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் சோனாக்ஷி சின்ஹாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக குறித்து சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சல்மான் கான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி திரையுலகில் ஹீரோவாக நடித்து வரும் அவருக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
தமிழில் பிக் பாஸை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதைப் போன்று, இந்தியில் பிக்பாஸை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

சல்மான் கான்
56 வயதாகும் சல்மான் கான்1988ம் ஆண்டு மைனே பியார் கியா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக பிரபலமானார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்து பாலிவுட்டில் கலக்கி வரும் சல்மான் இதுவரை யாரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே உள்ளார்.

ஐஸ்வர்யா ராயுடன் காதல்
Hum Dil De Chuke Sanam திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்ததாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், ஐஸ்வர்யா ராய் , அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டதால், சல்மான் திருமணமே செய்து கொள்ளாமல் தனிக்கட்டையாக வாழ்ந்து வருகிறார்.

சல்மான் கான் ரகசிய திருமணம்
காத்ரினா கைஃப், சோனாக்ஷி சின்ஹா என பல நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டுத்தான் வருகிறது. தற்போது, சல்மான் கான் சோனாக்ஷி சின்ஹாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், சல்மான் வெள்ளை நிற சட்டையும், பழுப்பு நிறத்தில் பிளேசரும் அணிந்திருக்கிறார். சோனாக்ஷி சிவப்பு நிற புடவை மற்றும் பிரைடல் சூராவையும் அணிந்து கொண்டு நிற்காக, சோனாக்ஷிக்கு மோதிரத்தை மாற்றுகிறார் சல்மான் கான்.

மாஃபிங் செய்யப்பட்ட
சல்மான் கானின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படம் குறித்து ஆராய்ந்த போது அது உண்மை இல்லை என்றும் சில மர்ம நபர்களால் மாஃபிங் செய்யப்பட்ட போட்டோ என்பதும் தெரியவந்துள்ளது.

ஜாகீர் இக்பாலுடன் காதல்
நடிகை சோனாக்ஷி சல்மான் கானுக்கு ஜோடியாக 'தபாங்'படத்தின் இணைந்து நடித்திருந்தார். அதே போல நடிகர் ஜாகீர் இக்பாலுடன் சோனாக்ஷி சின்ஹா உறவில் இருப்பதாக சமீபத்திய வதந்திகள் பரவின. இதைத் தெளிவுபடுத்திய நடிகை சோனாஷி, ஜாஹீர் எனது சிறந்த நண்பர், இந்த செய்தி கேட்கவே வேடிக்கையாக இருப்பதால் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











