கொலை மிரட்டல்.. ஏ.ஆர்.முருகதாஸ்க்காக உயிரையே பணயம் வைக்க தயாரான சல்மான் கான்.. இப்போ எங்க இருக்காரு?
ஹைதராபாத்: நடிகர் சல்மான் கான் தற்போது தனது சிகந்தர் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக உள்ளார். இந்தப் படத்தினை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகின்றார். இதுமட்டும் இல்லாமல், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சிவகார்த்திகேயனின் 23வது படத்தினையும் இயக்கி வருகின்றார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். ஏ.ஆர். முருகதாஸ் இரண்டு படப்பிடிப்புகளையும் சரியாக திட்டமிட்டு தொய்வில்லாமல் படத்தினை எடுத்து வருகின்றார். இதற்கிடையில் சல்மான் கானுக்கு கொலைமிரட்டல் விடப்பட்டதால், ஒட்டுமொத்த படக்குழுவினருமே பயந்து விட்டனர். அப்படி இருக்கும்போது, நடிகர் சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகந்தர் படத்தில் நடிக்க சல்மான் கான் ஹைதராபாத் வந்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தர்பார் படத்தினை இயக்கிய பின்னர் தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் இந்திய திரையுலகிலேயே எதிலேயும் காணவில்லை என்றே கூறவேண்டும். தர்பார் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்தது. அதற்கு முக்கிய காரணமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். தர்பார் படத்தின் படப்பிடிப்பு காலகட்டத்தின்போது, ரஜினிகாந்த் அரசியலில் காலடி எடுத்து வைக்கவுள்ளார் எனவும், ஏ.ஆர். முருகதாஸ்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால், அவர் படத்தினை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இதனால் படம் தோல்வியைத் தழுவியது.

அதன் பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் கமிட் ஆன படம் சிவகார்த்திகேயனின் 23வது படம்தான். இந்தப் படத்தின் அறிவிப்புகள் வந்த பிறகு, இவர் கமிட் ஆகியுள்ளார் என்ற அறிவிப்பு வெளியான படம் சிகந்தர் படம்தான். இந்தப் படத்தினை நேரடி ஹிந்திப் படமான எடுக்கின்றார் ஏ.ஆர். முருகதாஸ். இந்தப் படத்தில் சல்மான் கதாநாயகனாக நடிக்கின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் சிவகார்த்திகேயனின் 23வது படத்தின் படப்பிடிப்பு என இரண்டிலும் ஏ.ஆர். முருகதாஸ் மிகவும் தீவிரமாக கலந்து கொண்டார்.
படுகொலை: இதற்கிடையில் ஏ.ஆர். முருகதாஸ்க்கு பெரும் நெருக்கடியான மற்றும் பயத்தை அளிக்கக்கூடிய சம்பவம் நடைபெற்றது. அதாவது, கடந்த அக்டோபர் 12ஆம் தேதி சல்மான் கானின் நெருங்கிய நண்பர் மற்றும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. இது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இப்படியான நிலையில் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்தது.
கொலை மிரட்டல்: இதற்கு காரணமாக, பாபா சித்திக் மற்றும் சல்மான் ஆகியோர் தாவுத் இப்ராஹிம் உடன் மிகவும் நெருக்கமாக இருந்ததே காரணம் எனவும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சல்மான் கான் மட்டும் இல்லாமல் ஏற்கனவே கொல்லை செய்யப்பட்ட பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக்கிற்கும் கொலை மிரட்டல்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இதனால் சிகந்தர் படக்குழுவினர் அனைவரும் பயந்து போனார்கள் என்றே கூறவேண்டும். சல்மான் கானின் படப்பிடிப்புகளை பிறகு கூட எடுத்துக் கொள்ளலாம் என படக்குழு யோசிக்கும் அளவிற்கு சூழல் ஏற்பட்டிருந்தது. இறுதியாக போலீஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிகந்தர் படத்தின் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.

ஹைதராபாத்: போலீஸாரின் தீவிர விசாரணையில் குர்பான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பணம் பறிக்க திட்டமிட்டு இதுபோல கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் கூறினார். இருந்தாலும் சல்மான் கானின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவே படக்குழு பயந்தது. ஆனாலும் சல்மான் கான் படக்குழுவினருக்கு நம்பிக்கையூட்டி, படத்தின் படப்பிடிப்பினை தொடர்ந்து நடக்கும்படி பார்த்துக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும். இப்படியான நிலையில் அவர் தற்போது ஹைதராபாத்திற்கு வந்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனத் தெரிந்தும், தான் ஒப்புக்கொண்ட படத்தின் படப்பிடிப்பு பாதிப்படையக் கூடாது, தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என படப்பிடிப்பில் தொடர்ந்து அவர் கலந்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இந்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











