twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த் சிங் தற்கொலை.. சிக்கித் தவிக்கும் சல்மான் கான், கரண் ஜோஹர் பெயர்கள்.. என்ன தான் நடக்குது?

    |

    மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று முன் தினம் தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது.

    Recommended Video

    Sushant Singh Rajput தற்கொலைக்கு காரணம் இதுவா ?

    அவரது தற்கொலைக்கு காரணம் காதல் பிரச்சனைகள், மேனேஜர் மரணம் என சந்தேகங்கள் கிளம்பிய நிலையில், கரண் ஜோஹரின் அந்த டிவீட், பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வேறு ஒரு கோணத்தில் இந்த பிரச்சனையை அணுகி வருகிறது.

    பாலிவுட்டில் பெருகி வரும் நெப்போடிஸம் அரசியலுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கும் சல்மான் கான் தான் காரணம் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நெபோடிஸம்

    நெபோடிஸம்

    பாலிவுட்டில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து தனது திறமையை மட்டுமே வைத்து வளர்ந்து நடிகராவது நெடுங்காலமாகவே எட்டாக் கனியாகவே மாறி வருகிறது. திறமையே இல்லாத தனது குழந்தைகளையும், சொந்தக்காரர்களையும் முன்னணி நட்சத்திரங்களாக மாற்றும் பணியைத் தான் நெபோடிஸம் எனக் கூறி வருகின்றனர். இதே நெபோடிஸம் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு காரணம் என்ற குரல் தற்போது ஒலித்து வருகிறது.

    பாகிஸ்தானியர்களுக்கு

    பாகிஸ்தானியர்களுக்கு

    சல்மான் கான் தனது பேனரில் பல இஸ்லாமிய நடிகர்களுக்கே பாலிவுட்டில் முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் களமிறக்கி வருகிறார் என்றும், அதிகப்படியான பாகிஸ்தானிய நடிகர்களை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தி, இந்தியாவில் இருக்கும் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்புகளை குறைத்தும் அவர்களை பிளாக் லிஸ்ட் செய்தும் வஞ்சித்துள்ளார் என #SalmanKhan என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சல்மான் கான் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டையும் பாலிவுட் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

    அதே சமயம்

    அதே சமயம்

    நடிகர் சல்மான் கான் இஸ்லாமியர் எனும் காரணத்திற்காகவே அவர் மீது தற்போது இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுவதாகவும், கொரோனா வைரஸால் பாதித்த பலருக்கும், அவர்களது வங்கி கணக்குகளில் பணம் போட்டுள்ளார். பல பாலிவுட் திறமைகளை கண்டறிந்தவர் என்று சல்மான் கான் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    நீதி வேண்டும்

    நீதி வேண்டும்

    #JusticeForSushantSinghRajput என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, 2019ம் ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான சிச்சோரே படத்திற்கு ஒரு விருதும் வழங்கப்படவில்லை. ஆனால், அறிமுக நடிகையான அனன்யா பாண்டே நடித்த ஸ்டுடன்ட் ஆஃப் தி இயர் 2 படத்திற்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டதற்கு நெபோடிஸமே காரணம் என்று பாலிவுட்டில் நடைபெறும் பாரபட்சத்தை பலர் தோலுரித்துக் காட்டி வருகின்றனர்.

    கொடூர கொலை

    கொடூர கொலை

    எம்.எஸ் தோனி படத்தில் தோனியாக நடித்து சர்வதேச அளவில் பிரபலமான சுஷாந்த் சிங்கின் தற்கொலை உண்மையில் தற்கொலை அல்ல என்றும், பாலிவுட்டில் நடைபெற்று வரும் நெபோடிஸத்தின் கொடூர கொலை என்றும் நெட்டிசன்கள் பலர் பாலிவுட்டின் வாரிசு அரசியலை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

    கரண் ஜோஹர்

    கரண் ஜோஹர்

    கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு பெரிய படமும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு செல்லாமல் கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனம் அவரை பிளாக் லிஸ்ட் செய்து டார்ச்சர் செய்தது என்றும், அனுஷ்கா சர்மாவுடன் அவர் நடிப்பதாக இருந்த பானி படத்தில் இருந்து அவரை வெளியேற்றி கரண் ஜோஹர் இந்த செயலை செய்தார் என #KaranJoharIsBULLY என்ற ஹாஷ்டேக்கும் அவர் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு காரணம் என சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.

    என்ன தான் நடக்குது

    என்ன தான் நடக்குது

    உண்மையான திறமைக்கு பாலிவுட்டில் மதிப்பு அளிக்காமல் பிரபல நடிகர்களின் வாரிசுகளுக்கும், உறவினர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கி அவர்களை நட்சத்திரமாக்கி, கஷ்டப்பட்டு நடிகர்களாகும் திறமையானவர்களை புறக்கணிப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தாலே சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துக் கொண்டார் என பரப்பி வருகின்றனர்.

    English summary
    Salman Khan, Karan Johan, Alia Bhatt and Nepotism are the reason behind Sushant Sing Rajput sucide, Netizen slammed the celebs in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X