ஹீரோயின்களுக்கு முத்தம் தரமாட்டேன்.. சபதம் போட்ட சல்மான் கான்.. ஒரு நடிகையிடம் சறுக்கியது தெரியுமா?

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான், தனது படங்களில் 'முத்தம் வேண்டாம்’ என்ற கொள்கையை வைத்திருப்பவர். காதலி என்று கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய், சங்கீதா பிஜ்லானி மற்றும் கத்ரீனா கைஃப் போன்ற முன்னணி நடிகைகளுடன் பணிபுரிந்த காலத்தில் கூட அவர் இந்த விதியை கடைபிடித்துள்ளார்.

ஆனால், 1996ல் வெளியான ஒரு படத்தில் இந்த விதியை உடைத்து எறிந்துவிட்டார் சல்மான் கான். 'Jeet' என்ற படத்தில், சல்மான் கான் கரிஷ்மா கபூருடன் ஒரு சில விநாடிகளே கொண்ட முத்தக் காட்சியில் நடித்தார். இந்த காட்சி பற்றி இந்தி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் விவாதித்து வருகிறார்கள்.

salman khan bollywood

சில நெட்டிசன்கள், கரிஷ்மாவுக்கான தனது கொள்கையை சல்மான் உடைத்ததாக கருத்து தெரிவித்தனர், மற்றவர்கள் இது வேறு வழியில்லாமல், தற்செயலாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

சில நெட்டிசன்களோ அது முத்தமேயில்லை என போட்டோவை போட்டு விளக்கி வருகிறார்கள். சல்மான் கரிஷ்மாவின் உதடுகளை விட கன்னத்தில் முத்தமிடுவது போல் தோன்றியதாக தெரிகிறது என்கிறார்கள் அவர்கள்.

சல்மான் கான் தொடர்ந்து நடிகைகளுடன் முத்தக் காட்சிகளைத் தவிர்த்து வருகிறார். உதாரணமாக, 'டைகர் ஜிந்தா ஹை' படத்தில், கத்ரீனா கைஃப்பை முத்தமிட இயக்குநர் வலியுறுத்தினார். இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், சல்மான் மறுத்துவிட்டார். இந்த காட்சி படத்திற்கு முக்கியமானது என்று இயக்குநர் சொல்லிப் பார்த்தார். ஆனால் சல்மான் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

சல்மான் கான் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'சிகந்தர்' படத்தில் முத்தக் காட்சி இருக்குமா அல்லது அவரது உறுதியான 'முத்தம் வேண்டாம்' கொள்கை தொடருமா என்று ஹிந்திப் பட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் தொடர்ந்து அலசி வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X