தியேட்டர் தெறிக்குது.. அட்லீ படத்தில் சல்மான் கான் சரவெடி.. தெறி படத்தில் அந்த சீனே இல்லையே?

மும்பை: அட்லீ தயாரிப்பில் காலீஸ் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. கடைசியாக வெளியான டிரெய்லரில் சல்மான் கான் கண்ணை மட்டுமே பார்த்து ரசிகர்கள் கன்ஃபார்ம் செய்த நிலையில், தற்போது தியேட்டர்கள் தெறிக்கும் அளவுக்கு அவரது என்ட்ரி சீன் அமைந்துள்ளது.

ஷாருக்கானை வைத்து அட்லீ ஜவான் படத்தை இயக்கி அவருக்கு 1100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கடந்த ஆண்டு கொடுத்திருந்தார். அடுத்ததாக அட்லீ கமல்ஹாசன் மற்றும் சல்மான் கானை வைத்து பிரம்மாண்டமான பான் இந்தியா படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அதற்கு முன்னதாக அட்லீ தயாரிப்பில் சல்மான் கான் நடித்திருப்பது பாலிவுட் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

salman khan baby john atlee

சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி மற்றும் வருண் தவான் உள்ளிட்டோர் சமீபத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் கேமியோவாக நடித்து ஆக்‌ஷனில் மிரட்ட ஹீரோவாக நடித்துள்ள வருண் தவானே விசில் அடிக்கும் காட்சிகளை ரசிகர்கள் வீடியோவாக எடுத்து லீக் செய்துள்ளனர்.

பேபி ஜான் ரிலீஸ்: நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, ஜெய் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான அட்லீ தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நண்பன் படத்தில் பணியாற்றும் போது விஜய்யுடன் கிடைத்த நட்பு காரணமாக ராஜா ராணி படத்தை முடித்த கையோடு தெறீ படத்தை இயக்க ஆரம்பித்தார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் என 3 படங்களை ஹிட் கொடுத்த நிலையில், ஷாருக்கானின் ஜவான் படத்தையும் இயக்கி 1000 கோடி கிளப் இயக்குநராக மாறியுள்ளார். இந்நிலையில், பாலிவுட்டில் அவரது முதல் தயாரிப்பு படமான பேபி ஜான் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகம்: அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான மைதான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகலாம் என நினைத்த கீர்த்தி சுரேஷுக்கு அந்த படத்தில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்நிலையில், பாலிவுட்டில் அட்லீ தயாரிப்பில் அறிமுகமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு நயன்தாராவையும் பாலிவுட்டில் அட்லீ அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

salman khan baby john atlee

சல்மான் கான் கேமியோ: ஜவான் படத்தில் விஜய்யின் கேமியோ வரும் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்தார்கள். ஆனால், ஷாருக்கானே டபுள் ஆக்‌ஷனில் நடித்து வரும் நிலையில், விஜய்யின் கேமியோவுக்கு படத்தில் வேலை இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில், சல்மான் கானின் கேமியோவை பேபி ஜான் படத்தில் சரியான இடத்தில் இயக்குநர் காலீஸ் வைத்து அசத்தியிருக்கிறார். சல்மான் கானுக்காகவே பாலிவுட் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தெறி படத்தில் விஜய் நடித்த நிலையில், எந்தவொரு கேமியோவுக்கும் இடமில்லாமல் இருந்தது. வருண் தவான் ஒரு இடத்தில் சிக்கிக் கொள்ள சல்மான் கான் வந்து அவர்களை காப்பாற்றும் காட்சி பேபி ஜான் படத்தை ரீமேக் படமாக அல்லாமல் ரீமேட் படமாக மாற்றியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X